தற்கொலை செய்து கொள்வேன்!.. மைக் மோகனை மிரட்டிய மனோபாலா!.. நடந்தது இதுதான்!..
சினிமாவில் இரண்டு விஷயத்துக்குதான் பலரும் முயற்சி செய்வார்கள். அதேநேரம், அந்த இரண்டிற்கும் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். ஏனெனில், அந்த இரண்டும்தான் சினிமாவில் ஒருவரை மேலே தூக்கிக் கொண்டு போகும் ஒன்று நடிப்பது.. மற்றொன்று படங்களை இயக்குவது. இந்த இரண்டு வாய்ப்புகளையும் தட்டிப்பறிக்க பலரும் காத்திருப்பார்கள்.
ஒருவருக்கு போகும் வாய்ப்பை தட்டிப்பறிக்க பலரும் வேலை செய்வார்கள். அதையும் மீறி சினிமாவில் வாய்ப்பை பெற்று அதில் வெற்றியும் பெற்று காட்ட வேண்டும். அப்போதுதான் திரையுலகில் நீடிக்க முடியும். தொடர்ந்து வெற்றி கொடுத்தால் மட்டுமே ரசிகர்களால் கவனிக்கப்படுவார்கள். தயாரிப்பாளர்கள் தேடி வருவார்கள்.
இதையும் படிங்க: இயக்குனர்களை இப்படி தேர்ந்தெடுத்தே ஹிட் படங்களை கொடுத்தேன்!.. சீக்ரெட் ஆப் சக்சஸ் சொல்லும் மோகன்!…
இதில் அதிக பிரச்சனையை சந்திப்பது உதவி இயக்குனர்கள்தான். முதல் பட வாய்ப்பு கிடைக்க போராட வேண்டும். ஒரு ஹீரோவின் பின்னால் சுற்றி கதை சொல்லி அவரை சம்மதிக்க வேண்டும். தயாரிப்பாளர் அமைந்து படத்தை முடிக்க வேண்டும். அந்த படம் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த வாய்ப்பு கிடைக்கும். முதல் படமே தோல்வி எனில் யாரும் அவரை நம்பமாட்டார்கள்.
பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர்தான் மனோபாலா. இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘ஆகாய கங்கை’. கார்த்திக், சுஹாசினி நடித்திருந்த இந்த திரைப்படம் தோல்வி அடைந்தது. எனவே, அவருக்கு அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய மைக் மோகன் இதுபற்றி ஒரு முக்கிய தகவலை சொன்னார்.
மனோபாலா எனக்கு நல்ல பழக்கம். இருவரும் வாடா போடா நண்பர்கள். முதல் படம் தோல்வி என்பதால் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அடிக்கடி என்னை சந்தித்து கால்ஷீட் கேட்டு வந்தான். ஒருநாள் என்னிடம் வந்து ‘நீ எனக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன்’ என புலம்பினான். ‘ஒரு நாள் டைம் கொடு’ என சொல்லி அவனை அனுப்பி வைத்தேன்.
அப்போதுதான் என்னிடம் கால்ஷீட் கேட்டு கலைமணி வந்தார். ‘மனோபலாதான் இயக்குனர். இதற்கு ஒத்துக்கொண்டால் கால்ஷீட் கொடுக்கிறேன்’ என சொன்னேன். அடுத்தநாள் அயன் செய்த சட்டையுடன் சிரித்த முகத்தோடு மனோபாலா நின்று கொண்டிருந்தான். அப்படி உருவான படம்தான் பிள்ளை நிலா’ என மோகன் பகிர்ந்து கொண்டார்.