விரைவில் வாடிவாசல் ஸ்டார்ட்!.. ஹீரோ அவர்தானாம்!.. முடிவுக்கு வந்த பஞ்சாயத்து!..

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கியவர். தேசிய விருதுகளையும் பெற்றவர். இவரின் இயக்கத்தில் பெரிய நடிகர்களே ஆசைப்படுவார்கள்.

இப்போது விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை 2 படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து வருகிறது. வருகிற ஆகஸ்டு மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் எனவும், தீபாவளிக்கு இப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: உங்க கண்டீசனலாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்க.. நயனுக்கு கல்தா கொடுத்த இயக்குனர்

விடுதலை படத்தை துவங்குவதற்கு முன்பே கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கிற படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக அறிவிப்புகள் வெளியானது. இதற்காக ஜல்லிக்கட்டு காளையை வாங்கி சூர்யா வீட்டில் கட்டி அதோடு பழகி வந்தார். ஆனால், விடுதலை, விடுதலை 2 என 3 வருடங்கள் போய்விட்டது.

இடையில் சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் சூர்யா நடித்து அந்த படங்களும் வெளியாகிவிட்டது. அதன்பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்திலும் சூர்யா நடித்தார். எனவே, வாடிவாசல் படம் டிராப் எனவும் செய்திகள் வெளியானது. சூர்யாவுக்கு பதில் வேறொரு நடிகர் நடிப்பார் எனவும் செய்திகள் பரவியது.

இதையும் படிங்க: கேரள சூப்பர்ஸ்டாரின் வாய்ப்பைத் தட்டித் தூக்கிய உலகநாயகன்… அட அது சூப்பர்ஹிட் படமாச்சே..!

ஒருபக்கம், சூர்யா அடுத்து நடிப்பதாக இருந்த புறநானுறு, கர்ணா ஆகிய படங்கள் டிராப் ஆகிவிட்டது. எனவே, சூர்யா அடுத்த எந்த படத்தில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், வருகிற ஆகஸ்டு மாதம் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை துவங்கவிருக்கிறார் என்கிற செய்தி கசிந்திருக்கிறது.

இந்த படத்தில் சூர்யாவே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இயக்குனர் அமீரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி சூர்யா மற்றும் வெற்றிமாறன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

 

Related Articles

Next Story