பொதுவா வீட்ல இருக்கும் ஃபிரிஜ்ஜில் என்ன இருக்கும்? ஆனால் இந்த நடிகை என்ன வச்சிருந்தாங்க தெரியுமா?

Manisha Koirala: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த எத்தனையோ நடிகர் நடிகைகள் சரியான வாய்ப்புகள் இன்றி தன் வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சோகத்தினால் இருந்த வாழ்க்கையை பறிகொடுத்து விட்டு வாய்ப்புகள் இல்லாமல் அவர்களின் நிலைமை படு மோசமாக இருப்பதை நாம் கண்கூடாக பார்த்து இருக்கிறோம்.

அந்த வகையில் அறிமுகமான முதல் படத்திலேயே ஒரு அழகு பதுமையாக மக்கள் மனதில் பதிந்து தொடர்ந்து பெரிய பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க அந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகி தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த நெஞ்சங்களில் ஆணி போல பதிந்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. பம்பாய் படத்தின் மூலம் மணிரத்னத்தால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை தான் மனிஷா கொய்ராலா.

இதையும் படிங்க: பிரபல சீரியல் நடிகருடன் மறுமணம் செய்யப் போகும் ‘நாதஸ்வரம்’ சீரியல் நடிகை! அட இவரா?

அந்தப் படம் எப்படிப்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரியும். 20 வயதில் நடிக்க வந்தவர். அந்த படத்தில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அந்த படத்தில் ஒரு பக்கம் அரவிந்த் சுவாமி இன்னொரு பக்கம் மனிஷா கொய்ராலா இருவருமே போட்டி போட்டு அழகிலும் சரி திறமையிலும் சரி ரசிகர்களை மிகவும் கவர்ந்தனர்.

அந்த படத்திற்கு பிறகு முதல்வன், இந்தியன் என பெரிய பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் நடித்ததன் மூலம் ஒரு சூப்பர் ஹிட் நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் மனிஷா. பெரிய பெரிய இலக்கியவாதிகள் குறிப்பிட்டு சொல்லப் போனால் சாலமன் பாப்பையா கூட ஒரு பட்டிமன்ற பேச்சில் மனிஷா கொய்ராலா நம் மனசை கொய்ராலே என்று கூறியிருப்பார்.

இதையும் படிங்க: விரைவில் வாடிவாசல் ஸ்டார்ட்!.. ஹீரோ அவர்தானாம்!.. முடிவுக்கு வந்த பஞ்சாயத்து!..

அந்த அளவுக்கு மெய் சிலிர்த்து பேசி இருப்பார். இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நடிகையாக ஒரு காலத்தில் இருந்தார் மனிஷா கொய்ராலா. அவர் செய்த மிகப்பெரிய தவறு ரஜினி நடித்த பாபா படத்தில் நடித்ததுதான். அந்தப் படம் சூப்பர் ஃப்ளாப். அதிலிருந்து மனிஷாவின் மார்க்கெட் சுத்தமாக பறிபோனது.

அதன் பிறகு அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் வரவில்லை. அதனால் மனசு வெறுத்து மன அழுத்தத்திற்கு ஆளாகி மது பழக்கத்திற்கு பழகிப்போனார் மனிஷா. இதைப்பற்றி பிரபலமூத்த பத்திரிகையாளர் சேகுவாரா ஒரு பேட்டியில் கூறும்போது நடிகைகளை பொறுத்த வரைக்கும் அவர்கள் வீட்டு ஃபிரிஜ்ஜில் இருப்பது மது பாட்டிலாக தான் இருக்கும்.

அதைப்போல தான் மனிஷா வீட்டிலேயும் இருந்திருக்கும். எந்நேரமும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகவே மாறினார் மனிஷா என்று கூறினார் சேகுவாரா. அதன் மூலம் வந்தது தான் கேன்சர் நோய். அதிலிருந்து அவர் மீளவே முடியாத நிலையில் தான் இருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய அழகு போய் மிகவும் பார்ப்பதற்கு சோர்ந்து போயிருந்தார் மனிஷா.

இதையும் படிங்க: தளபதி 69 படம் டிராப்பா?!.. கோட் முடிஞ்சவுடனே நேரா அரசியலா?!.. என்னதாம்பா நடக்குது!..

முடி உதிர்ந்து பம்பாய் படத்தில் நடித்த மனிஷா வா இது என்று அனைவரும் ஆச்சரியப்பட்டு பார்க்கும் அளவிற்கு அவருடைய தோற்றம் மாறியது .அதன் பிறகு தான் மிகவும் வைராக்கியத்துடன் எப்படியாவது மீண்டும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு வெறியோடு ஆன்மீகத்தில் நுழைந்து மதுவை விட்டு இன்று மீண்டு வந்திருக்கிறார் மனிஷா.

வைராக்கியத்திற்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மனிஷா கொய்ராலாவை சொல்லலாம். அதைப் போல எத்தனையோ நடிகைகள் உதாரணமாக இருக்கிறார்கள். ஆனால் இவர் நடித்த ஒரு சில படங்களின் மூலமாகவே குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமானவர். ரசிகர்களின் மனதில் அச்சாணி போல பதிந்தவர். அவருக்கா இப்படி நிலைமை என அனைவருமே சோகத்தில் இருந்தனர். இப்பொழுது மீண்டு வந்து மறுபடியும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இவர் நடித்த அந்த சீரிஸ் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருப்பது அவருக்கு உண்டான முதல் வெற்றி என்றே கூறலாம் என்று சேகுவாரா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

 

Related Articles

Next Story