புஷ்பா 2 வெளியே!.. சந்துல சிந்து பாடிய சியான் விக்ரம்!.. சுதந்திர தினத்துக்கு யாருக்கு ஜாக்பாட்?..

பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பல மாதங்கள் தாமதமாகி சுதந்திர தினத்துக்கு வெளியாகப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

அல்லு அர்ஜுன் அல்டாப்பு காட்டி நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த படம் ஆகஸ்ட் மாதமே திரைக்கு வராது என்கிற அதிர்ச்சிகரமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: பொதுவா வீட்ல இருக்கும் ஃபிரிஜ்ஜில் என்ன இருக்கும்? ஆனால் இந்த நடிகை என்ன வச்சிருந்தாங்க தெரியுமா?

புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமமே 250 கோடிக்கு மேல் விற்பனை ஆனதாக உருட்டுகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த படத்திற்கு போதிய அளவிலான பிசினஸ் நடைபெறவில்லை என்றும் பெரிய தொகை கொடுத்து தெலுங்கு திரை உலகிலேயே விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க தயங்குவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலுங்கு மற்றும் ஹிந்தியில் படம் பெரிய அளவில் ஓடினால் தான் 500 கோடி பட்ஜெட்டுக்கு அதிகமாக வசூல் அள்ள முடியும். ஆனால், இந்த ஆண்டு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான படங்கள் எதுவுமே இதுவரை பெரிதாக வெற்றி பெறாத நிலையில், விநியோகஸ்தர்கள் புஷ்பா 2 படத்தின் மீது ஓவர் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என கருதுவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பிரபல சீரியல் நடிகருடன் மறுமணம் செய்யப் போகும் ‘நாதஸ்வரம்’ சீரியல் நடிகை! அட இவரா?

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ள நிலையில், அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தால் மட்டுமே புஷ்பா 2 படத்துக்கான பிசினஸ் நடக்கும் எனக் கூறுகின்றனர்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியாகாது என்கிற தகவல் தெரிந்ததும் உடனடியாக சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை அந்த தேதியில் ரிலீஸ் செய்ய ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: விரைவில் வாடிவாசல் ஸ்டார்ட்!.. ஹீரோ அவர்தானாம்!.. முடிவுக்கு வந்த பஞ்சாயத்து!..

 

Related Articles

Next Story