இயக்குனர் மணிரத்னம் திரைக்கதை மட்டும் எழுதிய படம் எது தெரியுமா?
90களில் வெளியான அதிரடி சண்டைப்படங்கள் - ஓர் கண்ணோட்டம்
தமிழ்ப்படங்களில் 80காலகட்டமும், 90காலகட்டமும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்த காலகட்டங்களில் வெளியான தமிழ்சினிமா கதாநாயகனின் நிறத்தையோ, உருவத்தையோ பார்க்கவில்லை. அதே போல கதையை மட்டுமே நம்பியது. வெளியான படங்கள் பெரும்பாலானவை சூப்பர்ஹிட் அடித்தன. அவற்றில் 90களில் வெளியான அடிதடி படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
பெரிய இடத்துப்பிள்ளை
செந்தில்நாதன் இயக்கத்தில் அர்ஜூன், கனகா, தீபிகா, கவுண்டமணி, செந்தில், ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்துள்ள படம் பெரிய இடத்துப்பிள்ளை.
ராதா பாரதி இயக்கிய இந்தப்படம் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்றது. சந்திரபோஸின் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட். மனசுல, வைக்கப்போரு, உன்னை போற்றி, வில்லுப்பாட்டு ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப்படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் வருகிறார்.
சேலம் விஷ்ணு
1990ல் வெளியானது. தியாகராஜன் என்ற ஒற்றை நபர் நடிப்பு, கதை, தயாரிப்பு, இயக்கம் என பன்முகங்களை இந்தப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். சங்கீத ராஜன் இசை அமைத்துள்ளார். இந்தப்படத்தில் தியாகராஜனுடன் சரத்குமார், ரூபினி, கீதா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இணைந்த கைகள்
ஆபாவாணன் தயாரிப்பில் 1990ல் வெளியான அதிரடி திரைப்படம். என்.கே.விஸ்வநாதன் இயக்கி உள்ளார். கியான் சர்மாவின் இசை புதுவிதத் தெம்பை ஊட்டியது. அருண்பாண்டியன், ராம்கி, நிரோஷா, சிந்து, நாசர், செந்தில், ஸ்ரீவித்யா, குள்ளமணி, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
சத்ரியன்
கே.சுபாஷின் இயக்கத்தில் 1990ல் வெளியான அதிரடி திரைப்படம். புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடித்த இந்தப்படம் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படம். மணிரத்னம் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல் கதை, திரைக்கதையையும் அவரே எழுதி, தயாரிக்கவும் செய்துள்ளார். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அத்தனையும் சூப்பர். மாலையில் யாரோ மனதோடு, பூட்டுக்கள் போட்டாலும், யாரு போட்டது ஆகிய மனது மறக்காத பாடல்கள் நிறைந்த படம்.
பணக்காரன்
ரஜினிகாந்த், கௌதமி, ஜனகராஜ், விஜயகுமார், ராதாரவி, சுமித்ரா, சரண்ராஜ், செந்தாமரை, பாண்டு உள்பட பலர் நடித்த படம் பணக்காரன். பி.வாசு இயக்கியுள்ளார். 200 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. இளையராஜா இசை அமைத்துள்ளார்.
பாடல்கள் அனைத்தும் சூப்பர். டிங் டாங் டாங், மரத்த வச்சவன், நூறு வருஷம், சைலன்ஸ், உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆகிய பாடல்கள் தேன் சொட்டும் ரகங்கள். இப்போது கேட்டாலும் மெய்மறக்கச் செய்துவிடும்.