90களில் வெளியான டாப் 5 படங்கள் - ஒரு பார்வை
தமிழ்சினிமாவில் சூப்பர்ஹிட் படங்கள் அதிகளவில் வந்த காலம் இது. 80, 90களில் அதிகபடங்கள் ரசிக்கும்படியாக வெளியாயின.
அவற்றில் பல படங்கள் இன்றுவரை பெயர் சொல்லும் அளவில் உள்ளன. அந்த வகையில் 90களில் வெளியான டாப் 5 படங்கள் பற்றி இப்போது பார்ப்போம்.
என்னுயிர்த்தோழன்
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் என்னுயிர்த் தோழன் படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. போலி அரசியல் தலைவர்களை நம்பும் தொண்டர்கள் எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர் என்பதை நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் சொன்ன படம்.
இன்றைய சூழலுக்கும் இந்தப் படம் பொருந்தும் வகையில் அமைந்திருப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.
யதார்த்தம் நிரம்பிய கதை, காட்சி அமைப்புகள் படத்திற்குப் பிளஸ் பாயிண்ட். பாபு நாயகனாகவும், ரமா நாயகியாகவும் நடித்துள்ளனர். அரசியல் அவலத்தை அச்சு அசலாகச சொன்ன விழிப்புணர்வு படம்.
கிழக்கு வாசல்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான படம். நவரச நாயகன் கார்த்திக், ரேவதி, குஷ்பூ உள்பட பலர் நடித்துள்ளனர். தரமான கதையாக இருந்தால் படம் சக்கைப் போடு போடும் என்பதை நிரூபித்துக் காட்டியது. மாநில அளவில் பல விருதுகைள அள்ளியது. தெருக்கூத்துக் கட்டி பிழைப்பு நடத்தும் நாயகன்.
அவனை விரும்பும் பக்கத்து ஊர் பண்ணையார் மகள். உள்ளூர் பண்ணையாருக்கு சின்ன வீடாக வந்து அவருக்கு உடன்படாமல் தன்னைக் காத்து வாழும் நாயகி. இவர் ஒரு அனாதை. நாயகி, நாயகிக்கும், நாயகனுக்கும் மலரும் புனிதமான உயர்ந்த காதல். இறுதியில் நாயகனும், நாயகியும் ஒன்று சேர்கின்றனர். முக்கோண காதலை புதுவிதமாக பேசுகிறது படம்.
கேளடி கண்மணி
விவேக் சித்ரா தயாரிப்பில் வெளியானது. விபரம் தெரியாத வயதில் தாயை இழந்த நாயகி தான் படத்தின் தூண். ஆட்டமா, பர்ட்டமா பாடல் செம மாஸ். தன் அப்பாவின் காதலுக்கும், அவரின் இரண்டாம் திருமணத்திற்கும், கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாள். ஆனால் வாலிப வயதில் அவளுக்கும் காதல் உணர்வு வர, தன் தந்தையின் காதலை நினைத்துப் பார்க்கிறாள்.
தானும் இன்னும் கொஞ்ச காலத்தில் சாகப்போவதை உணரும் நாயகி தன் தந்தைக்கு துணை வேண்டும் என்பதை உணர்ந்து தன் தந்தை காதலித்த பெண்ணை அரும்பாடு பட்டுக் கண்டுபிடித்து இணைத்து வைக்கிறாள். மாநில அரசின் விருதை பெற்றப் படம்.
நடிகன்
ராஜ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க, பி.வாசு இயக்கிய படம் நடிகன். தன் தாயின் வைத்தியச் செலவுக்காக இளைஞன் (நாயகன்) முதியவர் வேடம் அணிந்த நாயகனின் பலம் என்பதற்கேற்ப தாயின் வயதிற்கேற்ப ஒரு ஜனரஞ்சகமான படம்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சத்யராஜ், குஷ்பூ உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை பி.வாசு இயக்கியுள்ளார்.
நீங்களும் ஹீரோதான்
வி.சேகர் இயக்கிய முதல் படம். தன் வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமல், எப்போதும் தன் அபிமான கதாநாயகனைப் பற்றிய சிந்தனையிலேயே வாழ்க்கையை ஓட்டும் நாயகன்.
ஆனால் சினிமா ஹீரோ அயோக்கியத்தனம் கொண்டவனாகவும், வக்ர புத்தி உள்ளவனாகவும் இருப்பதையும் அறியும் ஹீரோ...ஒரு கட்டத்தில் அவனை ஒழித்துக் கட்டுகிறான்.
சினிமாவில் நல்லவனாக நடிக்கும் ஹீரோக்கள் தனிப்பட்ட வாழ்வில் மோசமானவர்கள் என்பதை வலியுறுத்தி சொன்ன படம். இதனால் தமிழ்த்திரை உலகினரின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளானது இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.