96 படத்தின் 2ம் பாகத்துக்குக் கதை ரெடிங்கோ… இனி தான் இருக்கு லவ்வோ லவ்வு..!

96 movie
2018ல் வெளியான சூப்பர்ஹிட் காதல் படம் 96. நந்த கோபால் தயாரித்துள்ளார். விஜய்சேதுபதி, திரிஷாவுக்கு இடையே நல்ல கெமிஸ்ட்ரி. ஜனகராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ளார். பள்ளியில் படிக்கும்போது வந்த காதல். அதன்பிறகு பள்ளிப்படிப்பு முடிந்து குடும்பத்தோடு சென்னை செல்லும் ஹீரோவுக்கு திரும்பவும் காதலியை சந்திக்க முடியாமல் போகிறது.
அதன்பிறகு 22 ஆண்டுகள் கழித்து வந்து தனது பள்ளித் தோழர்களைத் தொடர்பு கொள்வதற்காகத் தேடிச் செல்கிறார். ஒரு நபரையும் பார்த்து விடுகிறார். மீண்டும் தனது காதலியையும் சந்தித்து விடுகிறார். மீண்டும் அவர்கள் இணைந்தார்களா என்பதைப் படம் முழுவதும் கவிதை நயமாக சொல்லி இருப்பார் இயக்குனர்.
இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் அவரோட பழைய நினைவுகள் எங்கோ ஓர் இடத்தில் டச்சாகி விடுகிறது. இதுதான் படத்தின் வெற்றிக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இதன் 2ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதுகுறித்து இயக்குனர் என்ன சொல்றாருன்னு பாருங்க.
96 படத்தோட பார்ட் 2 கதையை எழுதி முடிச்சிட்டேன். அதிலும் அதே படம் தான் எந்த மாற்றமும் இல்லை. அந்தப் படத்தில் ராம், ஜானு கண்டிப்பா இருக்காங்க என்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.
படத்தில் விஜய்சேதுபதியும், திரிஷாவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். மீண்டும் இதே ஜோடி இணைவதால் படத்திற்கு இப்போது இருந்தே ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.