35 நாள் கழிச்சும் பீஸ்ட்டை விட்டுவைக்காத நெட்டிசன்கள்.! இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை….

Published on: May 17, 2022
---Advertisement---

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் 13ஆம் தேதி பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் இருந்து வெளியான ட்ரைலர் இப்படம் முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. மேலும், அதற்கடுத்த நாள் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானதால், தற்போது பீஸ்ட் திரைப்படம் வெளியான தடமே தெரியாத வண்ணம்  படத்தை தியேட்டரில் இருந்து தூக்கிவிட்டனர்.

இந்த படம் வெளியாகி இன்றோடு 35 நாட்கள் ஆகிறது. ஆனால், இன்னும் பீஸ்ட்டை வச்சி செய்ய இணையவாசிகள் தயாராகவே இருக்கின்றனர். ஆம், அதில் ஒரு காட்சியில் விஜய் ஒரு ராணுவ விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தனது மாஸ்க் மற்றும் ஹெல்மெட் ஆகியவற்றை கழட்டி விடுவார்.

இதையும் படியுங்களேன் – நாங்க எல்லாம் ஜலபுல ஜில்ஸ்.., பிரியா பவானிசங்கர் காலேஜில் அந்த மாதிரியாம்..,

மேலும், எதிரே  ராணுவ விமானத்தில் வரும் பைலட்டிற்கு இங்கிருந்து சலாம் போடுவார். இது இணையத்தில் ட்ரோல் மெட்டீரியலாக மாறி வருகிறது. இதனை ராணுவத்தை சேர்ந்தஓய்வு பெற்ற குரூப் கேப்டன் சிவராமன் சஜன் என்பவர், தனது டிவிட்டர் பக்கத்தில்,  எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. ‘  என அந்த ஒரு வீடியோவை பகிர்ந்து விட்டார்.

இதனை பார்த்ததும் வழக்கம் போல ரசிகர்கள் சண்டை ஆரபித்து விட்டது. மேலும், சில இணைவாசிகள் இதுதான் சமயம் என்று பீஸ்ட் படத்தை வச்சி செய்து வருகின்றனர். அதற்கு சில விஜய் ரசிகர்களும் முட்டு கொடுத்து வருகின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment