ஏன்டா ‘விக்ரம்’ இயக்க ஒத்துக்கிட்டோமோ.! கமல்ஹாசனால் நொந்து போன லோகேஷ் கனகராஜ்.!?

Published on: May 18, 2022
---Advertisement---

மாநகரம், கைதி, மாஸ்டர் என தான் எடுத்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது தனது ஆஸ்தான குருவான உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை ஹீரோவாக வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்து விட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசன் தான் எனது குரு அவரை நான் இயக்குவேன் என்று எதிர் பார்த்தது கூட இல்லை என்று பல பேட்டிகளில் கூறிய லோகேஷ் கனகராஜிற்கு கிடைத்த அன்பு பரிசு தன ஜூன் மூன்றாம் தேதி ரிலீசாக உள்ள விக்ரம்.

பொதுவாக கமல்ஹாசன் தன்னிடம் கதை கூறும் இயக்குனர்களுக்கு கதையில் நிறைய கரெக்சன் சொல்லுவாராம். அதனை சரிசெய்து கூறியவர்கள் தான் இயக்குனர்களாக இருப்பார்களாம். அப்படித்தான் லோகேஷும் கமலிடம் நிறைய முறை கரெக்சன் வாங்கியுள்ளாராம்.

vikram

லோகேஷ் முதலில் ஒரு ஒரு வரி கதையை கூறிய கமலிடம் ஓகே வாங்கி விட்டு, பின்னர் அதனை டெவலப் செய்துள்ளார். அப்போது நிறைய இடங்களில் கமல்ஹாசன் கரெக்சன் சொல்லி உள்ளாராம். சுமார் பத்து முறை இந்த திருத்தம் நடந்துள்ளதாம்.

இதையும் படியுங்களேன் – சூர்யாவுக்கே விபூதி அடிச்ச நம்ம அண்ணாச்சி.! இதுல என்னயா செஞ்சி வச்சிருக்கீங்க.?!

vikram3_cine

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் லோகேஷ் தனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் புலம்பியுள்ளாராம், ‘ ஏன் கமல்ஹாசன் சார் திரைப்படத்தை இயக்க ஒத்து கொண்டேனோ? என்று இருக்கிறது.’ என்று கூறியதாக ஒரு தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் உலா வருகிறது.

இருந்தாலும் தற்போது படத்தின் மொத்த காட்சி, பின்னணி இசை, அனைத்தையும் சேர்த்து பார்க்கையில் கமல்ஹாசன் கூறியது சரிதான். படம் மிகவும் அருமையாக வந்துள்ளது என்று படக்குழுவினர் பாராட்டி வருகின்றனராம்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment