Cinema News
உதயநிதி தயாரிப்பில் விஜய்.!? நான் எதையும் ‘மிரட்டி’ வாங்கலனு வேற சொல்லிருக்காரே இந்த மனுஷன்.!
தளபதி விஜய் தற்போது அவரது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். முழுக்க முழுக்க தெலுங்கு படமாக இப்படம் உருவாகிறது என்ற ரசிகர்களின் கேள்விக்கு, இது முழுக்க முழுக்க தமிழ் படமாக உருவாகிறது என்று படக்குழு பதில் அளித்து வருகிறது.
இப்படத்தை முடித்த பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் தான் தயாரிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளராக களம் காண வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
சமீபகாலமாக ஒரு தயாரிப்பாளர் தயாரித்த திரைப்படத்தை தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய தான் உதயநிதி ஸ்டாலின் வெளியீடு செய்து வருகிறார். ஆனால் தற்போது தளபதி விஜயின் படத்திற்காக இணை தயாரிப்பாளராகவும் களம் இறங்க உள்ளாராம்.
இதையும் படியுங்களேன் – உஷார் சிவகார்த்திகேயன் சார்.! கமலின் பழைய ஸ்கெட்ச்.., பிரபு தேவா, மாதவனுக்கு அடுத்து நீங்கதானாம்..,
சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய உதயநிதி, ‘ கமல் சார் படத்தை நான் மிரட்டி வாங்கி விட்டேன் என்று கூறுகிறார்கள். ஆனால், கமல் சாரை யாரும் மிரட்ட முடியாது. ‘ என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது விஜய் படத்தை முழுக்க முழுக்க லலித்குமார் தயாரிக்க இருந்த நிலையில், தற்போது இணை தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் இணைந்திருப்பதாக வந்த தகவல்கள், நெட்டிசன்களை பலவாறு கேள்விகளை எழுப்ப செய்துள்ளது.
எது எப்படியோ இவை அனைத்தும் தளபதி விஜய்க்கு தெரிந்து நடந்தால் எல்லாம் சரியாக நடக்கும். ஒருவேளை இப்படி நடிப்பது தெரிந்தால், ஒருவேளை அவர் வேறு முடிவெடுத்து வேறு தயாரிப்பாளரை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.