கமல் ஒரு தீர்க்கதரிசி.! அது சின்ன சாம்பிள் ‘இந்த’ சூப்பர் விஷயம் தான்.!

Published on: May 29, 2022
---Advertisement---

தற்போதெல்லாம் அன்றே கணித்தார் சூர்யா, அன்றே கணித்தார் கமல் என ஏகப்பட்ட விஷயங்கள் இணையத்தில் ஏன் எதற்கு என்று கூட பாராமல் ட்ரெண்ட் ஆகி விடுகிறது. ஆனால் உண்மையில் கமல் எதிர்காலத்தை கட்சிதமாக கணிக்கும் ஓர் அதிசய பிறவி தான்.

இதனை உறுதிப்படுத்த பல்வேறு சம்பவங்கள் தமிழ் சினிமாவில் நடந்துள்ளன. தமிழ் சினிமாவுக்கு புதிய டெக்னாலஜி கிடைத்துள்ளன. அப்படி ஒரு சம்பவம் தான் OTT. விஸ்வரூபம்  படத்திற்கு எதிர்ப்புகள் வந்ததை அடுத்து, அதனை டிவியில் சாட்டிலைட் மூலம் மக்கள் காசு கொடுத்து பார்க்கும் வண்ணம் வெளியிட அதிரடியாக தீர்மானித்தார்.

2012இல் அவர் இவ்வாறு கூறுகையில் எதிர்ப்புகள் கிளம்பின. தியேட்டர் அதிபர்களை தாண்டி சினிமா பிரபலங்களும் இதனால் சினிமா அழிந்துவிடும் என்பது போல கமலை விமர்சித்தனர். ஆனால், கமல் விடாப்பிடியாக கூறினார். இது பல பல ஊடகங்கள் வரும் என கூறினார்.

இதையும் படியுங்களேன் –  உன் மூஞ்சிக்கு அவளோ காசு தர முடியாது.! விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்.!

 

அவர் கணித்தது போலே தற்போது OTT நிறுவனங்களின் வருகை அதிகரித்து கொண்டே இருக்கிறது. தியேட்டரில் வெளியாகும் படஙக்ளை விட OTT படங்கள் அதிகமாக வருகின்றன. ரசிகர்களும் OTT யில் படம் பார்ப்பதை அதிகரித்து வருகின்றன.

10 வருடம் கழித்து விக்ரம் இசைவெளியீட்டு மேடையிலும் அதனையே குறிப்பிட்டார். OTT நிறுவனங்களின் வருகை குறித்து பேசினார். சாட்டிலைட் வரும் போது பயந்தார்கள். ஆனால், தற்போது வியாபாரம் அதன் மூலம் பெரிதாகியுள்ளது என கூறியுள்ளார். உண்மையில் எதிர்காலத்தில் நடக்க போவதை முன்கூட்டியே கணிக்கிறார் கமல்ஹாசன் என்று தான் கூறவேண்டும்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.