மீண்டும் அப்பாவாகும் சிவகார்த்திகேயன் – வாழ்த்துக்கள் சிவா….

Published on: May 29, 2021
---Advertisement---

5ee82545c83bbefd446ba55bf4105d17-2

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் சிவகார்த்திகேயன். அதன்பின் தனுஷுடன் 3 உள்ளிட்ட சில படங்களில் சின்ன வேடங்களில் நடித்தார். அவரை மெரினா திரைப்படம் மூலம் கதாநாயகன் ஆக்கியவர் பாண்டிராஜ். அதன் பின் சில திரைப்படங்கள். எதிர் நீச்சல் திரைப்படம் அவரை முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாற்றியது.

அதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களின் வெற்றி அவரை பல கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாற்றியது.  தற்போது இவர் நடிப்பில் டாக்டர், யாழ், அயலான் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதேபோல், டான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

99f0393e96ca60cafe26595b6d8db5d8-1

சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்கிற மகள் இருக்கிறாள். கனா படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார். 

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். எனவே, மீண்டும் அப்பாவாகும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள்….

Leave a Comment