Connect with us

Gossips

குத்தி கொடூரமாக கொன்ற விஜய் சேதுபதி.! 10 இடங்களை வெட்டி வீசிய சென்சார் குழு.! அப்செட்டில் உலகநாயகன்.!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. படத்தின் ட்ரைலரில் ஆக்ஷன் காட்சிகள் மிகவும் ராவாக இருக்கிறது ரசிகர்களை கவரும்படி இருக்கிறது.

vikram3_Cine

இந்நிலையில் இப்படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அதாவது இந்த திரைப் படம் சென்சாருக்கு அனுப்ப பட்ட பிறகு சென்சாரில் சுமார் 10 இடங்களில் கட் செய்துள்ளனராம்.

அதிலும் குறிப்பாக ஒரு காட்சியில் ட்ரெய்லரில் வரும் காட்சியில் விஜய் சேதுபதி ஒரு நபரை கொடூரமாக கொன்று விட்டு வருவது போல் காட்சி படுத்தப் பட்டிருக்கும். அந்தக் காட்சியின் நீளம் மிகவும் வன்முறை நிறைந்த இருப்பதாக கூறி அதன் நீளத்தை குறைத்து உள்ளனராம்.

மேலும் கமல்ஹாசன் பேசும் கெட்ட வார்த்தை வசனங்கள், ஆபாச வசனங்கள், ஆபாச காட்சிகள் என மொத்தமாக பத்து இடங்களில் சென்சார் கத்திரி போட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் –  மில்க் பியூட்டி தமன்னாவின் நிலமை இப்படி ஆச்சே., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!

இதனை அறிந்த ரசிகர்கள் படம் மிகவும் ராவாக ஆக்ஷன் காட்சிகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இருந்தாலும் படம் ரிலீசாகி 30 நாட்கள் கழித்து ஓடிடியில் எந்தவித கட்டும் செய்யாமல் படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top