தனது திருமணத்திற்கே பேரம் பேசிய நயன்தாரா.!? உங்கள் அறிவுக்கு நீங்க எங்கேயோ இருக்கனும் மேடம்.!

Published on: June 1, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவின் நீண்ட வருடங்களாக காதலர்களாக வலம் வரும் ஜோடி என்றால் அது நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் தான்.  2015ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் பட ஷூட்டிங் காலத்திலிருந்தே இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர்.

சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இம்மாதம் 9ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டு வருகிறது. அதற்கான திருமண அழைப்பிதழ் கூட இணையத்தில் வைரல் ஆனது.

முதலில் இந்த திருமணம் திருப்பதியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஏதோ சில காரணங்களால் அங்கு நடைபெறாமல் போனது. அதனை தொடர்ந்து சென்னை மகாபலிபுரத்தில் இந்த திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதற்கு பின்னால் தற்போது என்ன காரணம் என்பது தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்த திருமண வைபவங்களை படம் எடுத்து அதனை வெளியிட ஒரு பிரபல OTT நிறுவனம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோரிடம் ஒப்பந்தம் போட்டுள்ளதாம்.

இதையும் படியுங்களேன் – ஹாட் நியூஸ் : விஜயின் அலுவலகத்துக்கு சென்ற சிறுத்தை சிவா.! இணையத்தில் கதறும் ரசிகர்கள்.!

ஏற்கனவே பேசியபடி திருப்பதியில் திருமணம் நடைபெற்றால், போதுமான வீடியோ கிடைக்காது. அதிகமான ஆட்கள் வர முடியாது என்ற காரணத்தால் மகாபலிபுரத்தில் இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று வீடியோவாக வெளியிட்டுள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள், நல்ல நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் நயன்தாரா – விக்னேஷ் சிவன், இதனையும் அதேபோல வியாபார நோக்கத்தோடு செய்துள்ளனர் என்று நயன்தாரா – விக்னேஸ் சிவன் ஆகியோரின் செயலை கண்டு வியப்படைந்து உள்ளனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.