அடுத்த படம் வேற லெவல்… பீரியட் படம் எடுக்கும் தியாகராஜன் குமாரராஜா…

Published on: June 2, 2021
---Advertisement---

b315644bf59f04cc1afcd2b2ceca9ba4

சில இயக்குனர்கள் பல திரைப்படங்களை இயக்கி பெற்ற புகழை சில இயக்குனர்கள் ஓரிரு படங்களிலேயே பெற்றுவிடுவார்கள். ஒரு திரைப்படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையே பல வருட இடைவெளி விட்டு ரசிகர்களை காக்க வைப்பார்கள்.  

தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் இயக்குனர்களுக்கு பிடித்த இயக்குனராக மாறியவர் தியாகராஜன் குமாரராஜா. அப்படத்திற்காக தேசிய விருதையும் வாங்கினார். இவர் அடுத்த படம் எப்போது எடுப்பார் என ஷங்கர் உள்ளிட்ட இயக்குனர்களே ஆவலுடன் காத்திருந்தனர்.

a957d3f6218222e51c64cd92d972f073

அப்படம் வெளியாகி பல வருடங்கள் கழித்து சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் சமந்தா, பஹத்பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். குறிப்பாக விஜய் சேதுபதி இப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார். இப்படமும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், தற்போது பீரியட படத்திற்கான கதையை அவர் எழுதி வருகிறாராம். ஆனால், குறிப்பாக எந்த கால கட்ட கதை என்கிற தகவல் வெளியாகவில்லை. கதையை அவர் எழுதி முடித்தவுடன் விரைவில் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்கிற தகவல் வெளியாகும் எனத்தெரிகிறது.

Leave a Comment