Connect with us

Gossips

நெல்சனை நம்பாத ரஜினி.! மீண்டும் இணையும் பழைய கூட்டணி.! அவரை இப்படி அசிங்கப்படுத்திடீங்களே.!?

கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் கே.ஜி.எப் 2 உடன் மோதியது. இந்த படம் கொடுத்த எதிர்பார்ப்பு பீஸ்ட் ரிலீசுக்கு முன்பே ரஜினி பட இயக்கத்திற்கான வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது.

ஆனால், பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே போல ரஜினியின் முந்தைய படமான அண்ணாத்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆதலால் இந்த கூட்டணி தொடருமா என சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. தற்போது இதனை யோசித்து பார்த்த ரஜினி , தனது ஆஸ்தான கமர்சியல் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை அணுகி, அவரை அடுத்த பட வாய்ப்பை வழங்கியுள்ளாராம்.

இதையும் படியுங்களேன் –  விக்ரம்-3யும் இல்லை., இரும்புக்கை மாயாவியும் இல்லை.! ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த லோகேஷ்.!?

அதாவது, இயக்குவதற்கு இல்லை, மாறாக நெல்சன் உருவாகியுள்ள திரைக்கதையில் திருத்தம் செய்வது, அதனை மேம்படுத்துவது என அந்த திரைக்கதை மேற்பார்வை பணியை கே.எஸ்.ரவிக்குமார் மேற்கொள்ள உள்ளாராம். இதற்கான அதிகாரபூர்வ தகவல் படத்தின் அடுத்த அப்டேட் வந்தால் தான் தெரியவரும்.

nelson

இதனை அறிந்த ரசிகர்கள் பீஸ்ட் ரிலீசுக்கு முன்பு நெல்சன் கதைக்கு ஓகே சொன்ன ரஜினி, தற்போது அந்த திரைக்கதையில் மாற்றம் கொண்டுவர கே.எஸ்.ரவிக்குமாரை அணுகியிருப்பது நெல்சனின் திரைக்கதை மீது நம்பிக்கை இல்லாமல் அவரை அவமானப்படுத்துவது போல உள்ளது என இணையத்தில்  பேசி  வருகின்றனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top