13 பேருக்கு அப்பாச்சி பைக்.! பரிசுகளை வாரி வழங்கும் வள்ளல் கமல்ஹாசன்.!

Published on: June 8, 2022
---Advertisement---

கமல் நடித்த விக்ரம் திரைப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பேய் ஹிட் அடித்து வருகிறது. தமிழில் இப்படி ஒரு திரைப்படம் வராதா என ஏங்கி இருந்த தமிழ் ரசிகர்களுக்கும், தமிழில் இப்படி ஒரு படமா என பிறமொழி ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது.

Also Read

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூர்யா கமலுக்கு நன்றி கூறுவதாகட்டும், கமல் திருப்பி தம்பி சார் என கூறுவதாகட்டும், இயக்குனர் லோகேசுக்கு கமல் நன்றி கடிதம் எழுதியதாகட்டும், அதற்கு லோகேஷ் நெகிழ்ந்து போய் டிவீட் போட்டதாகட்டும் ஒரே பாசமழையாக இருந்து வந்தது.

இதையும் படியுங்களேன் – தனுஷ் படத்தில் இசைஞானி இளையராஜா.! அப்போ அனிருத்திற்கு என்ன வேலை.?!

சமீபத்தில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு கமல்ஹாசன் ஓர் சொகுசு காரை வழங்கினார் என்பதை பார்த்தோம். அந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாக இருந்தது . அந்த கருப்பு காரை லோகேஷ் படம் பிடித்து மேலும் வியப்பூட்டினார்.

இதனை தொடர்ந்து தற்போது கூடுதல் தகவலாக விக்ரம் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு ஆளுக்கு தலா ஒரு அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 பைக் என மொத்தம் 13 பைக்குகளை உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கியுள்ளாராம்.