
Cinema News
தயவு செஞ்சு இப்படி செய்யாதீங்க.. மறுபடியும் ஷூட்டிங்.! கடுப்பாகி எச்சரித்த தளபதி விஜய்.!
Published on
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம் யூத். சாஹீன் கான் ஹீரோயினாக நடித்திருந்தார். விவேக், விஜயகுமார், சிந்து மேனன், மணிவண்ணன் என பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர்.
இந்த திரைப்படத்திற்கு ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டார். இவர் விஜயின் புலி படத்திற்கும் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர் அண்மையில் விஜயுடன் தான் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அதாவது விஜய்க்கு பொய் சொல்வது சுத்தமாக பிடிக்காதாம். அது பற்றி கூறுகையில், ‘யூத் படத்தில் ஒரு காட்சி எடுக்கப்படும்போது, கதாநாயகி வேறு சேலை கட்டி எடுத்து விட்டார்கள்.
ஆதலால், அந்த காட்சியை திரும்ப எடுக்க வேண்டிய கட்டாயம். ஆனால், இந்த காரணத்தை சொல்ல முடியாது. அதனால், இயக்குனர் என்னை அனுப்பி வேறு ஏதாவது காரணம் சொல்ல சொன்னார். நான் சென்று விஜய் சாரிடம், ‘ சார் பிலிம் அழிந்து விட்டது. அதனால் திரும்ப ஷூட் செய்ய வேண்டும்.’ என்று பொய்யான காரணம் கூறினேன்.
இதையும் படியுங்களேன் –ரெட் லைட் ஏரியாவுக்கு போக போறேன்.! பகீர் கிளப்பிய ஹாட் நடிகை.!
உடனே விஜயும் சம்மதித்து 6 மணிக்குள் முடித்துவிடுங்கள். அதற்கு பிறகு வேறு சூட்டிங் இருக்கிறது. என்று சொல்லிவிட்டார். அதேபோல் 6 மணிக்கு விறு விறுவென சூட்டிங்கை முடித்து விட்டோம். பிறகு விஜய் என்னை தனியே கூப்பிட்டார்.
நன் அருகில் சென்று கேட்டபோது, ‘ ஏன் இப்படி செய்தீர்கள்? உண்மையான காரணத்தை சொல்லிவிட வேண்டியதுதானே? உடன் நடிக்கும் நாயகியும் சேலை கலர் கூட எனக்கு தெரியாதா? உண்மையை சொன்னால் நான் நடிக்க மாட்டேன் என்று கூற போகிறேனா? இது போல் திரும்ப செய்யவே செய்யாதீர்கள்?’ என்று ஒளிப்பதிவாளர் நட்ராஜ் இடம் கடிந்து கொண்டாராம் விஜய்.
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...