Connect with us

Cinema News

திருமண கோலத்தில் பத்திரிக்கையாளரை அடிக்க துரத்திய ரஜினிகாந்த்.! ப்பா மனுஷன் இப்படி பட்டவரா.?!

அண்மையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அதற்கு சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் பத்திரிகையாளர்களை சந்தித்து, திருமணம் முடிந்த பிறகு தங்களை நாங்கள் தம்பதியராக வந்து சந்திக்கிறோம். என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.

அதாவது திருமணத்தன்று பத்திரிகையாளர்களை வர வேண்டாம் என்று மறைமுகமாக சொல்லிவிட்டு சென்றுள்ளார் விக்னேஷ் சிவன். என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. அது தான் உண்மையும் கூட.

இதே போன்று தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், தனது திருமணத்தின் போது நடந்து கொண்டாராம். ஆனால் அவர் வெளிப்படையாக சொல்லிவிட்டாராம். தனது திருமணத்திற்கு முன்னர் பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் அழைத்து, எனது திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளது. நீங்கள் யாரும் அங்கு வர வேண்டாம். நானே உங்களுக்கு திருமண புகைப்படங்களை அனுப்பி வைக்கிறேன் என்று  கூறினாராம் ரஜினிகாந்த்.

இதையும் படியுங்களேன் – அந்த விஷயத்தை மாற்ற சொன்ன வெங்கட் பிரபு!…கடுப்பான அஜித்!…நடந்தது என்ன தெரியுமா?!…

அதையும் மீறி வந்தால், என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்கவே, உடனே தனக்கே உரித்தான பாணியில் ரஜினி, ‘வந்தால் உதைத்து விடுவேன்.’ என்று கூறிவிட்டாராம்.  திருப்பதியில் ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்த் திருமணம் நடைபெற்றபோது, ஒரு பத்திரிக்கையாளர் மறைமுகமாக அங்கு வந்துவிட்டாராம்.

இதனை எப்படியோ ரஜினிகாந்த் பார்த்து விட்டாராம். உடனே மணக்கோலத்தில் இருந்த ரஜினிகாந்த், தனது மாலையை கழற்றி வைத்துவிட்டு,0 அந்த பத்திரிக்கையாளரை துரத்தி அடிக்க பாய்ந்து  விட்டாராம். இந்த சம்பவத்தை அண்மையில் ஒரு நேர்காணலில் சினிமா மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top