Connect with us

Cinema News

இத வச்சி அவார்ட் வாங்க போறியா..? கொந்தளித்த விஜயகாந்த்… உளறி கொட்டிய விஜய்யின் மெகா ஹிட் இயக்குனர்…

தளபதி விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி எனும் பெரிய மெகா ஹிட் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பேரரசு. அதன் பிறகு மீண்டும் விஜயை வைத்து சிவகாசி எனும் சூப்பர் ஹிட் படத்தையும் அவர் இயக்கி இருந்தார்.

அதன் பிறகு பேரரசு இயக்கத்தில் வெளியான எந்த திரைப்படமும் முதல் இரண்டு திரைப்பட அளவுக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. அதனால், அடுத்தடுத்து படங்கள் இயக்குவதை குறைத்து கொண்டார். தற்போது அவர் எந்த படங்களையும் இயக்குவதாக தெரியவில்லை.

இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்று கேப்டன் விஜயகாந்த் பற்றி குறிப்பிட்டு பேசியுள்ளார். இவர் கேப்டன் விஜயகாந்த் நடித்த தர்மபுரி எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதையும் படியுங்களேன்- அப்போ.. சுதா கொங்காரா – சூர்யா திரைப்படம் நடக்காதா.?! பின்னணியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்…

அந்த திரைப்பட சூட்டிங் போது படத்தின் கேமராமேன் கேமராவை தயார் செய்ய கொஞ்சம் கால தாமதம் ஆக்கிவிட்டார். இதனை கவனித்த விஜயகாந்த் அவரிடம் சென்று நீ என்ன அவார்டு கொடுக்கவா இல்ல அவார்ட் வாங்கவா போற.? கமர்சியல் படம் தானே உடனடியாக எடுத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள் என்று கோபப்பட்டு கூறினாராம்.

விஜயகாந்த்திடம் பிடித்த விஷயமே அப்படி அவர் வெளிப்படையாக கோபப்படுவது தான் என்று இயக்குனர் பேரரசு தெரிவித்தார். தன் மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார் அப்படியே வெளியில் கொட்டி விடுவார. நான் திரையுலகில் அண்ணன் எனும் என்று கூப்பிடும் ஒரே நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் மட்டுமே என அவரைப் பற்றி மிகவும் பெருமையாக பேசி பேசினார் இயக்குனர் பேரரசு.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top