விஜய்க்கு போட்டியாக களத்தில் குதித்த அஜித்.. இருந்தும் தளபதி என்றும் சூப்பர்…

Published on: July 8, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் இரண்டு நடிகர்கள் யார் என்றால் அது அஜித்குமார் மற்றும் தளபதி விஜய்யை சொல்லலாம். அதன்படி, இருவரின் ரசிகர்களும் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய போட்டியாளர்களாக உள்ளன. மேலும், அந்தந்த நடிகர்களை நாளுக்கு நாள் சினிமாவில் உயர்த்துவதில் ஒரு நாளும் தவறவிட்டதே இல்லை.

விஜய் மற்றும் அஜித் சிறு குழந்தைகளை தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது மீண்டும் ஒரு ரசிகர்களின் போட்டியை தூண்டியுள்ளது. தற்போது ஐரோப்பாவில் பைக் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அஜித் விரைவில் வீடு திரும்புவார் என்றும், எச்.வினோத் இயக்கத்தில் தனது ‘AK 61’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஐரோப்பா சென்ற அஜித்குமார் அங்கு ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று தீயாக பரவ தொடங்கியது. இதில், என்ன சுவாரசியம் என்றால்… விஜய் தனது பீஸ்ட் படத்தின்போது, தளபதி விஜய் மக்கள் இயக்கம்  பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வளைத்தளத்தில் வெளியிட்ட அந்த புகைபடம் தான் காரணம். அதாவது, அவர் வெளியிட்ட புகைப்படத்தில் விஜய் ஒரு பிறந்த குழந்தையை கையில் தூக்கி வைத்திருப்பார்.

இதையும் படிங்களேன் – இத வச்சி அவார்ட் வாங்க போறியா..? கொந்தளித்த விஜயகாந்த்… உளறி கொட்டிய விஜய்யின் மெகா ஹிட் இயக்குனர்…

அப்போது, வெளியான அந்த புகைப்படம் இணையத்தில் சும்மா மளமளவென்று பரவியது. இப்பொது, விஜய் மற்றும் அஜித் தங்களது கையில் தூக்கி வைத்திருக்கும் குழந்தையின் புகைப்படங்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் அவர்களது ரசிகர்கள்.

 

இதற்கிடையில், விஜய் ரசிகர்கள் தங்கள் நடிகர் தான் முதலில் குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டதாக போட்டி போட…. தளபதி விஜய் தான் ஸ்மார்ட் டிவிட்டரில் மாத்தி மாத்தி, விமர்சித்து வருகிறார்கள்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.