Connect with us

Cinema News

விஜய் படம் பற்றிய திமிர் பேச்சு.. கடைசியில் ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பீஸ்ட் பிரபலம்…

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் “பீஸ்ட்” . படத்தின் திரைக்கதை சரியாக இல்லாத காரணத்தால் இந்த படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது.

சிலருக்கு படம் பிடித்து போனாலும், பலருக்கு ட்ரைலர் கொடுத்த பிரம்மாண்டத்தை படம் கொடுக்க வில்லை. அதனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வசூல் ரீதியாக மட்டுமே படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றியை பெற்றது.

இதையும் படியுங்களேன்- பரவாயில்ல சார் நான் விலகிவிடுகிறேன்… பெரிய இயக்குனரிடம் பெருந்தன்மையாக பேசிய சிம்பு.!

இந்த நிலையில், படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் ” பீஸ்ட் திரைப்படம் பற்றி கேட்கப்பட்டது. அதற்க்கு பதில் அளித்த அவர் இந்த படத்தில் விஜய் ஏன்னை தூக்கி கொண்டு எந்தவித முக பாவனையும் இன்றி செல்வார். ஒரு பொருளை நாம் தூக்குகிறோம் என்றால் முகத்தில் ஒரு வெயிட்டான பொருளைத் தூக்கி வருகிறோம் என்ற முகபாவனையை காட்ட வேண்டும்.

ஆனால், விஜய் அப்படி செய்யவில்லை. விஜய் முகத்தில் அப்படி ஒரு எக்ஸ்பிரஷன் இல்லவே இல்லை. பீஸ்ட் படத்தை பற்றிய ட்ரோல்களை நான் பார்த்து வருகிறேன். இன்னும் பீஸ்ட் பார்க்கவே இல்லை” என்று கூறியிருந்தார்.

இவர் பேசியதை பார்த்த விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஷைன் டாம் சாக்கோவைத்து ட்ரோல் செய்தனர்.  இதனையடுத்து ஷைன் டாம் சாக்கோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” தெரியாமல் பேசிவிட்டேன். என்னை மன்னித்து கொள்ளுங்கள் நண்பா” என தான் விஜய்க்குறித்தும், பீஸ்ட் குறித்தும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top