முக்கிய நபரை கைவிட்ட விஜய்… வாழ்வளித்த விஷால்… தளபதியை உலுக்கிய ‘அந்த’ சம்பவம்…

Published on: July 14, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழ்கிறார் தளபதி விஜய். இவரது திரைப்படங்களை திருவிழாவாக  கொண்டாட இங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரையும், தளபதி விஜயையும் உலுக்கிய ஒரு சம்பவம் என்றால், அது, மாஸ்டர் பட ஷூட்டிங் சமயத்தில் வந்த வருமானவரித்துறை சோதனை தான். அந்த சமயம் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை பாதியில் கூப்பிட்டு கொண்டு வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த சம்பவம் தமிழ் சினிமாவையே ஷாக் ஆக வைத்தது. அப்போது விஜய்யுடன் மேனேஜராக ராமு எனும் நபர் இருந்தாராம். வருமானவரித்துறை கேட்ட கேள்விகளுக்கு அவர் தான் பதில் அளித்து வந்தாராம். ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் சமாளிக்க முடியவில்லையாம்.  அந்த சம்பவத்திற்கு பிறகு  தனது மேனேஜர் பதவியை ராஜினாமா செய்து விட்டு விஜய்யை விட்டு விலகி விட்டாராம் அந்த மேனஜர்.

இதையும் படிங்களேன் – 10 வருஷம் ஆகியும் அஜித்தின் அந்த சாதனையை தொடகூட முடியல.. வெளியான சூப்பர் தகவல்…

விஜயும் மீண்டும் அவரை அழைக்கவில்லை என்று தெரிகிறது. இதனைப் பார்த்த நடிகர் விஷால், அவரை தனது மேனேஜராக தற்போது நியமித்து உள்ளாராம். தற்போது விஷாலின் கால்ஷீட் கணக்கு, சம்பள விவகாரம் போன்றவற்றை விஜயின் முன்னாள் மேனேஜர் பார்த்து வருகிறார் என்று சினிமாவில் கூறப்படுகிறது.

இதனை பார்த்த சினிமாவாசிகள், விஜய் சரியான நேரத்தில் கொடுத்த கால்ஷீட்டிற்க்கு படத்தில் நடித்து விடுவார். ஆனால், விஷால் அப்படி இல்லை. சமீப காலமாக அப்படி நடந்து கொள்வது இல்லையாம். விஷாலை எப்படி இவர் சமாளித்து செல்ல போகிறாரோ என்று புலம்பி வருகின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.