Connect with us

Cinema News

அந்த கூட்டத்திலும் அஜித் செய்த நெகிழ்ச்சி சம்பவம்… கண்கலங்கிய தாயார்… வைரல் வீடியோ இதோ…

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், தனக்கு பிடித்த மற்ற துறைகளிலும் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். இதற்கு முன்னர் கார் பந்தயத்தில் தனது பங்களிப்பை ஆற்றி  இருந்தார்.

தற்போது அவர் துப்பாக்கி சூடும் கலையில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். ஏற்கனவே கோயம்புத்தூரில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். தற்போது திருச்சியில் நடைபெற்ற போட்டியில் நேற்று கலந்து கொண்டார்.

திருச்சியில் இவர் வருவதை அறிந்த ரசிகர்கள் பலர் கூடி விட்டனர். லட்சக்கணக்கானோர் குடும்பத்துடன் முற்றுகையிட்டு விட்டனர். இதன் காரணமாக போலீசார் வந்து அவர்களை தடுத்து நிறுத்தும் படியாகிவிட்டது. இந்த கூட்டத்தை பார்த்த அஜித் கட்டிடத்தின் உச்சியில் இருந்து கை அசைத்து விட்டு சென்றார்

இதையும் படியுங்களேன் – ஒரு தடவ கேப்டனை பார்த்தா போதும்…நான் செத்துடுவேன்…முரட்டு வில்லனின் நெகிழ்ச்சி பதிவு…

அவர் கீழிறங்கி திரும்பி சீழ்க்கையில் ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் அஜித்தை பார்க்க நின்றுள்ளார். இதனை கவனித்த அஜித், உடனே அருகில் ஓடி வந்து அந்த குழந்தையை வாங்கி தான் வைத்துக்கொண்டு,  தாய் மற்றும் குழந்தை மற்ற பெண்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.

இந்த வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றி ரசிகர்கள் பூரிப்படைந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top