நான்தான் புதிய கட்டப்பா.! இத பாத்தா ஒருத்தரும் வாய்ப்பு தரமாட்டாங்களே.? காஜல் செய்த சிறப்பான சம்பவம்.!

Published on: August 11, 2022
---Advertisement---

தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த காஜல் அகர்வால் கொரானா பரவல் காலகட்டத்தில் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் மட்டும் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.

பிறகு நடிப்பது நிறுத்திவிட்டு, கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். அவருக்கு இந்த ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த குழந்தைக்கு “நீல்” என்று பெயர் வைத்துள்ளனர். சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்கிய காஜல் அகர்வால் தனது குழந்தையை தற்பொழுது கவனித்து வருகிறார்.

இதற்கிடையில், அவ்வப்போது தனது குழந்தையுடன் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் ஜாலியான நகைச்சுவை வீடியோக்களை தனது இணையதள பக்கங்களில் வெளியிட்டு  ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன் –ஒரு வழியா பவானிக்கு தாலி கட்டிய அமீர்.. வெளியாகி புயலை கிளப்பிய வீடியோ…

kajal_main_cine

அதில் பாகுபலி படத்தில் வரும் கட்டப்பா போன்று தனது மகனின் காலை தன் தலையில் வைத்திருப்பது போன்று அந்த புகைப்படம் உள்ளது. இந்த வீடியோவை ராஜமௌலிக்கு டெடிக்கேட் செய்வதாக கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த சினிமாவாசிகள் இந்த புகைப்படத்தை பார்த்தால் ஒருத்தரும் படத்தில் நடிக்க வாய்ப்பு தர மாட்டார்களே என்று கூறி வருகின்றனர். ஏனென்றால் காஜல் அகர்வால் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டால் சில படங்களில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு தான் வரும் என கூறி வறுகிறார்கள்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.