அது பழைய வீடியோங்க.. ப்ளீஸ் விட்ருங்க… பதட்டத்தில் அனிருத்.? வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்.!

Published on: August 19, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவின் தற்போது தொட்டதெல்லாம் தங்கம் என்று பழமொழி பொருந்தும் வகையில் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து ஹிட் கொடுத்து வருபவர் அனிருத். இவர் நடிகர் விஜய்க்காக கத்தி, மாஸ்டர், பீஸ்ட், என மூன்று படங்களுக்கு இசையமைத்து மூன்று படங்களிலுமே சிறப்பான பின்னணிசையும், சிறப்பான பாடல்களையும், கொடுத்திருப்பார்.

anirudh vijay

அதேபோல, விஜய்க்கு மட்டும் தான் அப்படி ஹிட் கொடுப்பாரா என்கிற அளவிற்கு அஜித்திற்கும் வேதாளம், விவேகம் எனும் இரண்டு படங்களில் தரமான இசையை கொடுத்துள்ளார். இப்படி டாப் நடிகர்களான விஜய், அஜித் படத்திற்கு இசையமைத்த அனிருத் முன்னதாக ஒரு பேட்டியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

anirudh and ajith

அந்த வீடியோவில் அனிருத் பேசியிருந்தது ” தான் ரஜினி படத்திற்கு பிறகு அதிகமாக திரையரங்குக்கு சென்று பார்த்த படம் அஜித் படம் தான் என்று பேசியிருந்தார். விஜயின் பெயரை அவர் கூறவில்லை.

இதையும் படியுங்களேன்- சியான் விக்ரமுக்கு இந்த கொடுமையா.?! இதெல்லம் வேணாம் ரஞ்சித்… கெஞ்சும் ரசிகர்கள்….

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் விஜய்க்காக பல ஹிட் பாடல்கள் கொடுத்த அனிருத்தே அஜித் ரசிகர் தான் என்று அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை இப்போது அனிருத் பார்த்தால் கண்டிப்பாக பதட்டபடுவர் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.