Connect with us

Cinema News

எனக்கு கரெக்ட்டா அன்னைக்கு தான் அந்த 3 நாள்.. ஓப்பனாக கூறிய வாணி போஜன்..

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று அங்கு நல்ல ரசிகர்களை கொண்டவர்கள் இங்கு வெகு சிலரே. அதில் ஒருவர் தான் வாணி போஜன். சின்னத்திரை சீரியல் நடிக்கும் போதே சின்னத்திரை நயன்தாரா என பெயர் எடுத்தவர் தான் வாணி போஜன்.

இவர் நடிப்பில் ஓ மை கடவுளே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு, டிரிபிள்ஸ் எனும் வெப் சீரிஸில் நடித்தார் அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, விக்ரம் ஜோடியாக மகான் படத்திலும் நடித்து இருந்தார். அருண் விஜய் உடன் தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் சீரிஸில் நடித்து உள்ளார். அது நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸுக்காக ப்ரோமோஷன் பேட்டிக்காக வாணி போஜன் கலந்து கொண்டார். அதில் பல கேள்விகள் கேட்கப்பட்டது அதில், கிசுகிசு பற்றி கேட்கப்பட்டது.

அது பற்றி பேசிய, வாணி போஜன், நான் தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடர் லன்ச்சில் கலந்துகொண்டேன். அப்போது, அன்றைக்கு பெண்களுக்கு மாதந்தோறும் வரும் மாதவிடாய் பிரச்சனை எனக்கும் இருந்தது. அப்போது என்னால் வர முடியாது. இருந்தாலும் பரவாயில்லை என நான் வந்தேன்.

vaani bhojan

இதையும் படியுங்களேன் – விஜயை திணறடித்த அந்த ஒரு கேள்வி.. தளபதி கொடுத்த மாஸ் பதிலடி என்ன தெரியுமா.?!

அதில் என் முகம் ரெம்ப வாடி போய் டயர்ட்டாக இருந்தேன். அப்போது எனது முகம் கொஞ்சம் குண்டாக தெரிந்தது . அத்னை போட்டோ எடுத்து எடிட் செய்து, பிளாஸ்டிக் சர்ஜரி தவறாக முடிந்துவிட்டது என கிளப்பி விட்டுட்டார்கள். அது உண்மையில் ஷாக்கிங்காக சிரிக்கத்தான் செய்தேன் என ரெம்ப ஓபனாக தனது நிலமையை கூறினார் வாணி போஜன்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top