Connect with us

Cinema News

தனது தங்கச்சி இறந்தபோது விஜய் இதைத்தான் செய்தார்… கண்ணீர் விட்ட S.A.சந்திரசேகர்…

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இடத்தில், சொல்லப்போனால், முன்னணி இடத்தில் இருக்கிறார் தளபதி விஜய். இவர் பட வசூலிலும், மாஸ் காட்சியிலும் என்றும் குறை வைப்பதில்லை என்றாலும், இவர் மனதிலும் ஆறாத காயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆம், இவரது 10வது வயதில், இவரது உடன் பிறந்த தங்கை வித்யா இறந்துவிட்டார். அந்த சோக நிகழ்வு பற்றி அண்மையில் ஒரு நேர்காணலில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது தாய் ஷோபா கூறுகையில்,

இதையும் படியுங்களேன் – நாங்க என்ன கேட்டோம்.? நீங்க என்ன செய்றீங்க.? சிம்புவை நொந்து கொண்ட ரசிகர்கள்… விவரம் இதோ…

‘ அன்றைய தினம் டாக்டர் இனிமேல் காப்பாற்ற முடியாது என கூறிவிட்டனர். அப்போது எனது மகள் என் மடியில் இருந்தார். உயிர் எனது மடியில் தான் பிரிந்தது. அப்படியே கண் மூடியது. அருகில் விஜய்க்கு 10 வயது தங்கை இறந்தது  தாங்காமல் வித்யா (விஜய் தங்கை பெயர் ) என கதறி அளித்துவிட்டார்.

இதையும் படியுங்களேன் –  ஹீரோ முதல் இயக்குனர்கள் வரை.. எந்த ஏரியாவாக இருந்தாலும் இவங்க டாப் தான்… எம்.ஜி.ஆர், கமல் முதல் சிம்பு, தனுஷ் வரையில்…

பிறகு விஜய் அம்மா கூறுகையில், ‘ வித்யா நினைவாக தான் தனது மகளுக்கு அதே போல சத்தம் வரும்படி திவ்யா என் பெயர் வைத்துள்ளார்.’ என வருத்தத்துடன் தனது மகன் விஜய் பட்ட மனக்கஷ்டத்தை பகிர்ந்து கொண்டனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top