
Cinema News
முதலில் அட்டர் ஃபிளாப்… அடுத்தடுத்து மெகா ஹிட்.! மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் முதல்.. சமுத்திரக்கனி வரை…
Published on
தற்போதெல்லாம் ஒரு அறிமுக இயக்குனர் முதல் படம் பிளாப் கொடுத்தால் அவ்வளவு தான். ஏன், தமிழில் மிக பெரிய ஹிட்கள் கொடுத்த இயக்குனர்களே பிளாப் கொடுத்துவிட்டால் அவ்வளவு தான் அடுத்து வேறு மொழிக்கு செல்ல வேண்டியது தான். இல்லையென்றால் சில வருடங்கள் காத்து கிடைக்க வேண்டி வரும்.
நல்ல வேலையாக அந்த காலத்தில் அப்படி ஒரு நிலைமை இல்லை. அதனால், பல சூப்பர் ஹிட் இயக்குனர்கள் தப்பித்து விட்டனர். அந்த இயக்குநர்களின் லிஸ்டை இப்பொது பார்க்கலாம்.
மணிரத்னம் – முதல் படம் கன்னடம், இரண்டாவது மலையாளம் , மூன்றாவது படம் தான் தமிழில் முரளி, சத்யராஜ் நடித்த பகல் நிலவு எனும் திரைப்படம். அந்த படம் வெளியான சமயத்தில் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதன் பிறகு இதய கோவில் திரைப்படம் ஓர் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு தான் இன்றளவும் கொண்டாடப்படும் மௌன ராகம் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
கே.எஸ்.ரவிக்குமார் – பக்கா கமர்ஷியல் இயக்குனர், பல சூப்பர் ஹிட், சில மெகா ஹிட் படங்களை கொடுத்த இவர், முதலில் தனது பாதை தெரியாமல் புதுசாக எழுதுகிறேன் என புரியாத புதிர் எனும் திரில்லர் படத்தை எடுத்து, ரிசல்ட் பார்த்து, இது நம்ம ரூட் இல்லை என தெரிந்து கொண்டார். அதன் பிறகு தான் சேரன் பாண்டியன், நாட்டாமை முதல், முத்து, படையப்பா என பல கமர்ஷியல் கொடுத்துவிட்டார் கமர்சியல் கிங் கே.எஸ்.ரவிக்குமார்.
தரணி – இவர் இந்த லிஸ்டிலா? இவர் முதல் படம் தில் சூப்பர் ஹிட், தூள், கில்லி என அடுத்தடுத்து மெகா ஹிட் என சிலர் நினைப்பதுண்டு. ஆனால் இவர் முதலில் இயக்கிய படம் மம்முட்டி, நெப்போலியன் நடித்த எதிரும் புதிரும் எனும் திரைப்படம். அது திரையில் வருவதற்கு முன்னர் டிவியில் திருட்டு தனமாக வெளியானதும், படம் தோல்வியடைந்ததற்கு ஓர் காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் – பல லட்சம்…பல கோடி…சினிமாவுல கூட இவ்வளவு சம்மாதிக்க மாட்டாங்க போல!..
சீனு ராமசாமி – இவருக்கும் அதே கதை தான், முதல் படம் விஜய் சேதுபதி அறிமுகமான தென் மேற்கு பருவக்காற்று இல்லை. அதற்கு முன்னரே, பரத் இரட்டை வேடத்தில் நடித்த கூடல் நகர் படத்தினை இயக்கி தோல்வி கண்டு பின்னர் கிராமத்து பக்கம் ஒதுங்கியவர் தற்போது வரை நகரத்து பக்கம் திரும்பாமல் அங்கேயே தங்கிவிட்டார்.
இதையும் படியுங்களேன் – இவங்களுக்கு இதே வேலையா போயிடிச்சு… முதலில் விஜய்.. இப்போ தனுஷ் சிக்கிட்டார்…
சமுத்திரக்கனி இயக்கிய முதல் படமான உன்னை சரணடைந்தேன் பிளாப், தடையற தாக்க, தடம் பட இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய முதல் படமான முன்தினம் பார்த்தேனே ஆகிய படங்கள் பிளாப் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Idli kadai: ராயன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் நேற்று வெளியானது.. இந்த படத்தை ரெட்ஜெயண்ட்...
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...
Vijay TVK: தற்போது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க...
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...