நான் எவளோ கஷ்டப்படுகிறேன் தெரியுமா.? ஆனால் ரஜினி..? இது கமலின் பாராட்டா.?! விமர்சனமா.?

Published on: August 28, 2022
---Advertisement---

சினிமாவில் எப்போதும் இரு துருவ அரசியல் என்பது நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் முதலில் எம்.ஜி.ஆர் – சிவாஜி தொடங்கி,  ரஜினி – கமல்,  விஜய் அஜித் என அடுத்தடுத்த தலைமுறைகளை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் ஒருவர் ஏதேனும் படத்தில் நடித்திருந்தாலும், விருது வாங்கி விட்டாலோ அதனைப் பற்றி சக போட்டியாளராக நாம் நினைக்கும் மற்றொருவரிடம் இந்த கேள்விகளும் அவர் வாங்கி விட்டாரே நீங்கள் வாங்கவில்லையா என்று இது சில சமயம் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு தர்ம சங்கடத்தை உண்டு செய்யும் விதமாக கேள்விகளும் எழும்.

அப்படி ஒரு நிலைமை தான் அண்மையில் கமல்ஹாசனுக்கும் நடந்துள்ளது. ஆம் வருடா வருடம் தேசிய விருது கமிட்டி இந்திய சினிமா அளவில் சிறந்து விளங்கும் சினிமா கலைஞர்களுக்கு தாதா வாழ்நாள் சாதனையாளர் விருது எனப்படும் தாதாசாகேப் பால்கே விருது வழங்குவது வழக்கம். அப்படிப்பட்ட விருது கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது குறித்து கமல்ஹாசனிடம் ஒரு பேட்டியில் ஒரு நிருபர் கேட்டுவிட்டார். உங்களுக்கு வழங்கப்படாத விருது. அவருக்கு வழங்கப்பட்டு விட்டதே. அவருக்கு கொடுக்கப்படாமல் இருந்தால் இந்த கேள்வி எழுந்திருக்காது. அவருக்கு கொடுத்து விட்டார்கள் அதனால் அந்த கேள்வி எழுகிறது என்று நிருபர் கமலிடம் கேட்டார். அதற்கு கமல் செம கூலாக பதில் கூறினார்.

இதையும் படியுங்களேன் –  அப்பாடா அவங்களுக்கு கோப்ரா பிடிக்கலையாம்.. அப்போ விக்ரம் படம் பெரிய ஹிட்… இது சினிமா சீக்ரெட்..

அவர் கூறுகையில், ‘ ஏன்? அதில் என்ன தவறு இருக்கிறது, நான் கஷ்டப்பட்டு உடல்வருத்தி, கெட்டப் போட்டு நடித்து சம்பாதிக்கும் அந்த மரியாதை, புகழ், ரசிகர்களின் கரகோஷம், ரஜினி வந்து திரையில் நின்றாலே அந்த மேஜிக் நடந்து விடுகிறது. அதனை ஏன் தவறாக கருத வேண்டும்? அது வெகு சிலருக்கு கிடைக்கும். அந்த ஒரு குணம் அவருக்கு (ரஜினிக்கு) இருக்கிறது.

இதையும் படியுங்களேன் –  நீ இப்படி இருந்தால் தான் ரெம்ப அழகா இருக்க… ஓப்பனாக கமெண்ட் அடித்த தனுஷ்.! வெளியான சீக்ரெட்…

மேலும், அவர் அந்த விருதுக்கு தகுதியானவரே. எனக்கும் பத்மபூஷன் விருது கொடுத்தார்கள். ஆனால் அதே சமயம் என்னைவிட திறமையானவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அதனால் அது விருது கொடுப்பவர்களின் விருப்பம். அது ஏன் கொடுத்தார்கள் ஏன் கொடுக்கவில்லை என்றெல்லாம் கேள்வி எழுப்ப முடியாது. என்று தனது நிதானமான பதிலை கூறிவிட்டு சென்றார் உலக நாயகன் கமலஹாசன்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.