தமிழ் சினிமாவில் நிறைய உண்மைச் சம்பவங்களை படமாக எடுத்து கதைக்கு ஏற்றாற்போல சில மாறுதல்களை உருவாக்கி அதன் மூலம் அந்த உண்மைச் சம்பவத்தின் பின்னனியில் இருக்கும் காரணம், எதனால்? ஏன்? என மக்கள் அறிய இயக்குனர்கள் தன் படைப்புகளை உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ஏராளமான தமிழ் படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இப்படி ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் உண்மையை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாகவும் சொல்லும் வகையிலும் படங்கள் அமைகின்றன. அந்த வகையில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் நடிகர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் தான்.
இதையும் படிங்கள் : அந்த பாட்டால என் அரசியலே மாறியிருக்கும்…! தவறவிட்ட வருத்தத்தில் கமல்…! அதுவும் எம்.ஜி.ஆர் பாட்டுனா சும்மா..?

அந்த படத்தில் வீரபத்ரனாக நடித்திருக்கும் மன்சூர் அலிகான் அப்படியே வீரப்பனையே கண்முன் காட்டும் அளவிற்கு தத்ரூபமாக நடித்திருப்பார். அந்த படத்திற்கு வசனம் எழுதிய லியாகத் அலி இந்த கதையை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இவர் ஒரு சிறந்த இயக்குனரும் ஆவார். அதாவது இந்த படம் வீரப்பனை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு நீதிமன்றம் காட்சியில் விஜயகாந்த் வீரபத்ரன் கெட்டவன் இல்லை. சில பேரின் லாபத்திற்காக பயன்படுத்தி கெட்டவனாக்கப்பட்டவன் என்று கூறியிருப்பார்.

ஆகவே இந்த படத்தில் வீரப்பனை நல்லவனாக சித்தரித்திருப்பார் லியாகத் அலி. இது முடிந்து இன்னொரு பட சூட்டிங்கிற்காக விஜயகாந்த்தை சந்திப்பதற்காக கோபிசெட்டிபாளையம் போயிருக்கிறார். சூட்டிங் எல்லாம் முடிந்து பேக் அப் பண்ணி வரும் போது அங்கு கூடியிருந்த மக்கள் ஒன்றரை மணி நேரம் வீரப்பன் இங்கு தான் நின்னு பார்த்துக் கொண்டிருந்தார் எனவும் கேப்டன் பிரபாகர் படத்தை பார்த்து லியாகத் அலி மேல் வீரப்பனுக்கு ஒரு அன்பு இருந்ததாகவும் சில பேர் கூறினார்கள் என லியாகத் அலி தெரிவித்தார்.
