
Cinema News
கட்டபொம்மனுடன் மோதி அடிவாங்கிய கண்ணதாசன்.. சோதனையில் புலம்பி தள்ளிய கவியரசு…
Published on
கவியரசு கண்ணதாசன் தமிழில் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். தமிழ் சுவை சொட்ட சொட்ட அவர் எழுதிய பாடல்கள் காலத்திற்கும் பாடப்படுபவை. தத்துவம், காதல், சென்ட்டிமென்ட், வறுமை என அவர் தொடாத விஷயங்களே கிடையாது. அந்த அளவுக்கு கவித்தன்மையும் தமிழ் வல்லமையும் கொண்டவர்.
இவ்வாறு கவியரசராக வலம் வந்த கண்ணதாசனுக்கு சொந்த படம் தயாரிக்க வேண்டும் என ஆசை வந்தது. அதன் படி 1958 ஆம் ஆண்டு “மாலையிட்ட மங்கை” என்ற திரைப்படத்தை கண்ணதாசன் தயாரித்தார். இதில் டி ஆர் மகாலிங்கம், பண்டரி பாய், மனோரமா, காகா ராதாகிருஷ்ணன் என பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கவிஞராக வெற்றி வாகை சூடிய கண்ணதாசன் ஒரு தயாரிப்பாளராகவும் தனது முதல் படத்தில் வெற்றி பெற்றார்.
ஆனால் அதன் பிறகு தான் வினையே ஆரம்பித்தது. அதாவது 1959 ஆம் ஆண்டு “சிவகங்கை சீமை” என்ற திரைப்படத்தை கண்ணதாசன் தயாரித்தார். சுதந்திர போராட்ட வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரன், வரலட்சுமி, எம் என் ராஜம் என பலரும் நடித்திருந்தனர். சிவாஜி கணேசனின் “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படத்திற்கு போட்டியாக தனது திரைப்படத்தையும் வெளியிட முடிவு செய்தார் கண்ணதாசன்.
அவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் “சிவகங்கை சீமை” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிடலாம் என கண்ணதாசனுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் கண்ணதாசன் அவர்களின் அறிவுரையை பொருட்படுத்தவில்லை.
அதன் விளைவு என்ன ஆனது தெரியுமா? கண்ணதாசன் பெரும் நஷ்டத்தை கண்டார். கிட்டதட்ட ரூ. 90,000 நஷ்டம் ஏற்பட்டதாக கண்ணதாசன் தனது சுயசரிதையில் தெரிவித்திருக்கிறார்.
“வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படம் தமிழின் முதல் கலர் திரைப்படம். ஆனால் “சிவகங்கை சீமை” கருப்பு வெள்ளை திரைப்படம். மேலும் “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படங்களில் வசனங்கள் எல்லாம் நச் என்று இருக்கும். இந்த விஷயங்கள் தான் “சிவகங்கை சீமை” ஓடாததற்கு காரணங்களாக இருந்துருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு திரைப்படங்களுமே சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான். ஆனால் நெருக்கமானவர்களின் அறிவுரையை கேட்காததால் கண்ணதாசன் பெரிதும் நஷ்டம் ஏற்பட்டு அடிவாங்கி இருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...
Vijay: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த...
Idli kadai: ராயன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் நேற்று வெளியானது.. இந்த படத்தை ரெட்ஜெயண்ட்...