Cinema History
ஜூனியர் டெக்னீஷியன்னு நெனைச்சுட்டேன்; ஐ யம் சாரி – தேவயானி யாரிடம் மன்னிப்புக்கேட்டார் தெரியுமா?
இயக்குநர் களஞ்சியம் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற படம் பூமணி. இந்தப் படத்தில் முரளி, பிரகாஷ்ராஜ், மணிவண்ணன், வினு சக்கரவர்த்தி இவர்களோடு நடிகை தேவயானி நடித்திருந்தார். பூமணி படப்பிடிப்பின்போது புகைப்படக் கலைஞர் பூபதி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, தேவயானி கொஞ்சம் இங்கே பாருங்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். அது நடிகை தேவயானிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டதாம்.
இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் போன்றவர்கள் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாம். ஒரு சாதாரண டெக்னீஷியன் எப்படி என்னைப் பெயர் சொல்லி அழைக்கலாம் என்று கடுப்படித்தாராம். இந்த சம்பவம் குறித்த தகவல்கள் அப்போது வெளியே கசிந்திருக்கிறது. செய்தித் தாள்களில் இதுகுறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் நடந்து சுமார் 10 நாட்களுக்குப் பிறகு மணிவண்ணன் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். அதற்கு முன்பாகவே காதல் கோட்டை படத்தில் தேவயானியுடன் சேர்ந்து இயக்குநர் மணிவண்ணன் நடித்திருந்தார். இதனால், இருவருக்கும் அறிமுகம் இருந்திருக்கிறது. படப்பிடிப்பு தளத்துக்கு வந்தவுடன் எங்கப்பா அந்தப் பொண்ணு தேவயானி. உடனே என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: சரத்குமாருக்கு “நோ” சொன்ன கே எஸ் ரவிக்குமார்.. உள்ளே புகுந்து வரலாறு படைத்த விக்ரமன்..
மேலும் தேவயானியிடம் மற்றவர்கள் கூப்பிடத்தானே நமக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். என்னைக் கூட எவ்வளவோ பேர் பெயர் சொல்லித்தான் அழைத்திருக்கிறார்கள். அதற்காக நான் கோபப்பட முடியுமா.. என்று சொல்லி விளக்கம் கொடுத்திருக்கிறார். நடந்த சம்பவத்துக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தேவயானியிடம் சொல்லியிருக்கிறார்.
புகைப்படக் கலைஞர் பூபதி எடுத்த ஆல்பத்தை படக்குழுவினர் பார்த்துக் கொண்டிருந்தபோது, அதைப் பார்த்து தேவயானி மிரண்டே விட்டாராம். அந்த அளவுக்கு மிரட்டலாகப் புகைப்படங்களை பூபதி எடுத்திருக்கிறார். அந்த நேரத்தில் படக்குழுவினர் எல்லோர் முன்னிலையிலும், பூபதியிடம் தேவயானி மன்னிப்புக்கேட்டிருக்கிறார். உங்களை ஜூனியர் டெக்னீஷியன் என்று நினைத்துவிட்டேன்.
ஐ யம் சாரி பூபதி என்று தேவயானி மன்னிப்புக் கேட்டு சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். தேவயானியிடம் மணிவண்ணன் எடுத்துச் சொன்னபோது அவர் தன்னுடைய தவறை உணர்ந்து பொறுமையாகக் கேட்டுக்கொண்டாராம். இதை இயக்குநர் களஞ்சியம் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.