Connect with us

Cinema News

தொடர்ந்து அறை வாங்கிய சில்க்… அவரின் பல நாட்கள் ஆசையை நிறைவேற்றிய பாரதிராஜா…

கண்ணழகால் மயக்கியது மட்டுமல்லாமல் நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்த சில்க் ரொம்ப நாட்களாக இருந்த ஆசையை இயக்குனர் பாரதிராஜா நிறைவேற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நாயகிகள் என்றால் சந்தேகமே இல்லாமல் பட்டியலில் முதலிடம் எடுத்தவர் சில்க் ஸ்மிதா. இவருக்கு பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்பு குவிந்தது. ஆனால், அவருக்கு அதில் பெரிய விருப்பம் இல்லையாம். ஒரே ஒரு படத்தில் குணசித்திர நடிகையாக நடிக்க வேண்டும் என விரும்பினாராம்.

இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்தது இயக்குனர் பாரதிராஜா தான். சில்கிற்கு ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். தியாகராஜனின் மனைவியாக அவரின் பல நாள் ஆசையில் புடவை கட்டி நடித்தார். அப்படத்தில் அவரின் பெரிய ஆசை நிறைவேறி இருந்ததால் அதீத மகிழ்ச்சியில் இருந்தார். இதனால், அவரை ஷூட்டிங்கில் பல டேக்குகள் செல்லும் போது பாரதிராஜா அறைந்து இருக்கிறார். இதற்கெல்லாம் சில்க் கவலையே படவில்லை.

இதையும் படிங்க: சில்க் ஸ்மிதாவ நான் காப்பாற்றியிருக்கலாம்…நான் தான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்…உணர்வுகளை கொட்டும் அனுராதா

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில், தெலுங்கில் தயாரிப்பதற்கான வேலைகளும் தொடங்கியது. ‘சீதா கோக சிலகா’ எனப் பெயரிடப்பட்ட படத்தில் கல்லுக்குள் ஈரம் நாயகி அருணா நடித்தார். தியாகராஜன் கதாபாத்திரத்தில் சரத்பாபு நடித்தார். ஆனால், அவரின் மனைவி பாத்திரத்தில் தமிழில் நடித்த சில்க் ஸ்மிதாவே தெலுங்கிலும் நடித்தார்.

படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸாகியது. அந்த சூழலில் அக்கதை சமுகத்திற்கு தேவை என்பதால் படம் வசூலில் பெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தினை அப்போதைய அதிமுக சார்பில் பாராட்டி கலைவாணர் அரங்கில் விழா நடத்தினர். அதில் பேசிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், குடும்ப பாங்கான வேடத்தில் நடித்திருக்கும் சில்க் ஸ்மிதா, இனி கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Continue Reading

More in Cinema News

To Top