Connect with us

Cinema History

சில்க் ஸ்மிதாவ நான் காப்பாற்றியிருக்கலாம்…நான் தான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்…உணர்வுகளை கொட்டும் அனுராதா

80ஸ்களில் கவர்ச்சி விருந்துகளை வாரி இறைப்பதற்கென்றே நடிகைகள் பலர் இருந்தனர். டிஸ்கோ சாந்தி, அனுராதா, சில்க்ஸ்மிதா அவர்களில் முக்கியமானவர்கள். இவர்களில் நடிகை சில்க் ஸ்மிதா தான் நம்பர் ஒன் என்பது நாம் அறிந்ததே. ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த அவருடைய கடைசி தருணங்கள் யாரும் எதிர்பாராதது. அந்த தருணங்களை அவரது தோழி அனுராதா பகிர்கிறார்.

நான் வந்த புதுசுல சில்க் ஸ்மிதாவுக்கு போட்டி போட்டின்னு சொல்லி எனக்கு ஒரு ராங் பப்ளிசிட்டிய கொடுத்துட்டாங்க. இது ஒரு பெரிய சக்சஸ கொடுத்ததுங்கறது வேற விஷயம். ஒண்ணா ஷ_ட்டிங் போனா கூட அவங்க ஒரு ஓரமா சேர போட்டு உட்காருவாங்க. நான் ஒரு ஓரமா உட்கார்ந்துருப்பேன். என் கூட பேச மாட்டாங்க. போகும்போது கூட அவங்க பாட்டுல கிளம்பி போயிடுவாங்க.

disco shanthi

பேசமாட்டாங்க போல இருக்கு. நான் ஏதோ தப்பா இன்டர்வியு கொடுத்துட்டதா நினைச்சிக்கிட்டாங்க. சினிமாங்கறது கடல் மாதிரி. அதுல அலைகள் மாதிரி ஒவ்வொருத்தரா வந்து போய்க்கிட்டு இருப்பாங்களே தவிர எல்லாருமே நிரந்தரமா அது ஓடம் மாதிரி ஒரே இடத்துல நின்றுடாது. நிக்க முடியாது. நான் வந்து 2 – 3 வருடங்கள் வரை என்கிட்ட பேசவே இல்ல. ஒண்ணா ஒர்க் பண்ணியிருக்கோம். பேசல. ஒரு தெலுங்கு படம் எடுத்தாங்க. அதுல டிஸ்கோ சாந்திக்கு ஒரு சாங். எனக்கு ஒரு சாங் கொடுத்தாங்க. இந்த படத்துல எனக்கு நைட் ஷ_ட்டிங்.

காலைல டிஸ்கோ சாந்தி சாங். அப்போ என்னை பீம்ராஜ்னு ஒரு வில்லன் ஆக்டர் தூக்கி கீழே இறக்கி ரெண்டாவது தூக்கி மேல வைக்கணும். அவரு கீழே போட்டுட்டாரு. நான் மலைல விழுந்தேன். என் கால் ட்விஸ்டாகி இறங்கிட்டு. உடனே சில்க் ஸ்மிதா வந்து லேடி ஆர்டிஸ்ட நீங்க எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியாதா…அவங்க பூ மாதிரி…நீங்க என்ன அப்படியே தூக்கிப் போட்டுட்டீங்க…

அவங்க 3 மாசம் படுத்துட்டாங்கன்னா நீங்க சம்பாதிச்சிக் கொடுப்பீங்களா?னு தெலுங்குல கத்திட்டுப் போனாங்க. அப்புறம் என்னை கூட்டிட்டுப் போயி கால்ல ஸ்ப்ரே அடிச்சி, பேண்டேஜ் கட்டிட்டு நான் நொண்டிக்கிட்டேப் போயி அந்த சாங் எல்லாம் பண்ணிக்கொடுத்துட்டேன். அப்ப தான் எங்கிட்ட பேச ஆரம்பிச்சாங்க. டிஸ்கோசாந்திக்கிட்டயும் பேச ஆரம்பிச்சாங்க. எனக்கு சில்க் சீனியர். அதுக்கு அப்புறம் ரொம்ப குளோஸ் ஆனாங்க.

silk smitha

பழக ஆரம்பிச்சிட்டா அவள மாதிரி க்யுட் யாருமே இருக்க மாட்டாங்க.

சில்க் இறந்து போகிறதுக்கு முன்னாடி நானும் என் கணவரும் கன்னடப்படத்திற்காக சில்க்குக்கு பேசி கொடுத்தோம். சில்க் 2 டூயட் சாங் எல்லாம் முடிச்சிட்டாங்க. நாலு நாள் முன்னாடி சில்க் வீட்டுக்குவந்துட்டா. வீட்டுக்காரர் இன்னைக்குத் தான் வாராரு. அன்னைக்கு சில்க் எனக்கு போன் பண்ணினா. எனக்கு உங்கிட்ட ரொம்ப அர்ஜென்டா பேசணும். நீ வர முடியாதா?ன்னு சில்க் கேட்டார்.

இல்லடி… இன்னைக்குத் தான் சதீஷ் வாராரு. நாளைக்கு காலைல ஸ்கூல்ல பிள்ளைகள ட்ராப் பண்ணிட்டு நான் உடனே வந்துடறேன். 9 மணிக்கு உங்க வீட்ல இருப்பேன். நீ ரொம்ப அர்ஜென்ட்னா சொல்லு. நான் சதீஷ் வந்ததும் ….ஓ…அப்படியா அப்ப நாளைக்கு வந்துடறீயா கண்டிப்பான்னு கேட்டார். நாளைக்கு 9 ஓ கிளாக் வந்துடறேன்னு சொன்னேன். அவ சரின்னு சொல்லி வச்சிட்டா.

மறுநாள் காலைல நான் பசங்கள எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு அவங்கள போயி பார்க்கலாம்னு புறப்படறேன். அப்போ தான் ப்ளாஷ் நியூஸ் ஓடிட்டு இருக்கு. அனு அனுன்னு என் ஹஸ்பண்ட் கூப்பிடுறாரு. பெரிய ஷாக் என்னன்னா நடிகை சில்க் ஸ்மிதா மரணம் அப்படின்னுட்டு சூசைடு பண்ணிட்டாங்கன்னுட்டு போட்டுருக்கு. ஒரே ஷாக் தான். பசங்கள எங்க அம்மா கிட்ட விட்டுட்டு நீங்க கொஞ்சம் பாத்துக்கங்கன்னு சொல்லிட்டு நான் கிளம்பிட்டேன்.

ஒரு வேளை நான் அன்னைக்கு நைட் கூப்பிட்டதுக்கு போயிருந்தா ஒருவேளை நான் காப்பாத்திருக்க முடியுமோன்னு பீல் பண்றேன். ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். அதை நினைச்சி நான் ரொம்ப தடவை பீல் பண்ணிருக்கேன்.

google news
Continue Reading

More in Cinema History

To Top