10 கோடி ரூபாய்… படத்தின் பட்ஜெட் அல்ல; ஒரு பாட்டின் பட்ஜெட் – வாரியிரைக்கும் சரவணன் அண்ணாச்சி !

Published On: December 20, 2019
---Advertisement---

f5fb98712e23c90a326a777e5bd4df93-1

லெஜண்ட் சரவணா நடிக்கும் படத்தின் பாடல் ஒன்றுக்காக 10 கோடி ரூபாய் செலவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

விளம்பரங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடனமாடி தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன். தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்.

820ed30bd20b7e6291bed912278a72c3-1

முன்னணி நடிகைகளோடு தான் ஜோடி சேருவேன் என்று அடம்பிடித்த அவர் யாரும் அவருடன் நடிக்க சம்மதிக்காததால் புதுமுக நடிகையுடன் இப்போது படத்தை ஆரம்பித்துள்ளார். இந்த படத்தை அவரை வைத்து விளம்பர படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குனர்கள் இயக்குகின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் வேலை செய்கின்றனர். மிக பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜை சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.

848a0276a4abe323f067f4adfe4f373a

தற்போது முதல்கட்டமாக தொடங்கியுள்ள படப்பிடிப்பில் பிரம்மாண்டமான பாடல் காட்சி ஒன்று படம் பிடிக்கப்பட்டு வருகிறது . இந்த பாடல் காட்சிக்காக மட்டும் 10 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாடல் காட்சி சம்பந்தமான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பரவி வருகின்றன

Leave a Comment