தமிழ் சினிமாவின் காமெடி கிங் என பெயர் பெற்ற கவுண்டமணி இந்த நிலைக்கு வர காரணம் இயக்குனர் பாக்யராஜ் தான். அப்படி அவர் கவுண்டமணிக்கு செய்த மிகப்பெரிய விஷயம் குறித்த சுவாரஸ்ய சம்பவம் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் 16 வயதினிலே படத்தில் தான் முழு படத்தில் நடித்தார் கவுண்டமணி. அப்படத்தினை தொடர்ந்து வில்லனாக அவர் நடித்த கிழக்கே போகும் ரயில் திரைப்படம் நல்ல வரவேற்பை அவருக்கு கொடுத்தது. ஆனால் இந்த வாய்ப்பை பாரதிராஜாவிடம் சண்டையிட்டு வாங்கி கொடுத்தது பாக்யராஜ் தானாம்.

ஆனால் பாரதிராஜா முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. டெல்லி கணேஷை தான் அப்படத்தில் பாஞ்சாலி அக்கா கணவர் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நினைத்தார். ஆனால் பாக்யராஜ், கவுண்டமணிக்கு விக் வைத்து மேக் அப் டெஸ்ட் செய்தனர். அப்போது படக்குழுவினர் பெரும்பாலானோர் கவுண்டமணிக்கு தான் இந்த கதாபாத்திரம் சரியாக இருக்கும் என நினைக்க துவங்கினர். இதை தொடர்ந்து பல நேர சமாதானத்துக்கு பின்னர் பாரதிராஜாவும் ஓகே சொல்லிவிட்டார்.

இந்த தகவலை உடனே கவுண்டமணியிடம் சொல்ல கிளம்பினாராம் பாக்யராஜ். எல்டாம்ஸ் சாலையில் நடுசாம நேரத்தில் பாக்யராஜை பார்த்த கவுண்டமணி என்ன இந்த நேரத்தில் என விசாரித்தாராம். அப்போது அவரிடம் கிழக்கே போகும் ரயில் வாய்ப்பு கிடைத்து விட்டதாக கூறினாராம் பாக்யராஜ். உடனே தனக்கு கிடைத்த முதல் மிகப்பெரிய வாய்ப்பை நினைத்து அங்கையே கண்ணீர் விட்டு அழுததாக பாக்யராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.




