ரஜினியின் கண்களை உறுத்தும் விக்ரம் படத்தின் வசூல்… இறங்கி ஆட தயாராகும் சூப்பர் ஸ்டார்…

Published on: November 4, 2022
Rajini and Kamal
---Advertisement---

லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியான நிலையில் கமல்ஹாசனின் திரைப்பயணத்திலேயே மாபெரும் வெற்றித்திரைப்படமாக அமைந்தது. மேலும் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த மாபெரும் வசூல் சாதனையை முன்னிட்டு கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ்ஜுக்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்தார்.

Vikram Movie
Vikram Movie

அதே போல் “விக்ரம்” திரைப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளையும் பரிசாக அளித்தார். அதுமட்டுமல்லாது, ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சையும் பரிசாக அளித்தார்.

இதனிடையே ரஜினிகாந்த் நடித்து வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

இதையும் படிங்க: “சிவகார்த்திகேயன் மாத்தி மாத்தி பேசுறார்”… சீண்டிப்பார்க்கும் பிரபல பத்திரிக்கையாளர்… ரொம்ப தைரியம்தான்…

Rajini in Jailer
Rajini in Jailer

“ஜெயிலர்” திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது. நெல்சன் இதற்கு முன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் சரிவர கைக்கொடுக்காமல் போன நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்தின் மூலம் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு, “ஜெயிலர்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் இயக்குனர் நெல்சன் ரஜினிகாந்த்திடம் இது குறித்து கேட்டபோது, அவர் மறுத்துவிட்டாராம்.

Kamal Haasan
Kamal Haasan

இந்த நிலையில் கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படத்தின் வசூலை எப்படியாவது முந்திவிடவேண்டும் என ரஜினிகாந்த் கண்ணாக இருக்கிறாராம். எப்படியாவது “ஜெயிலர்” திரைப்படம் “விக்ரம்” திரைப்படத்தை விட அதிக வசூல் செய்து சாதனை படைக்க வேண்டும் என விரும்புகிறாராம். ஆதலால் “ஜெயிலர்” படக்குழுவினர் வெறித்தனமாக உழைத்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.