வாரிசுக்கு எமனாக வந்த உதயநிதி…அப்செட்டில் விஜய்..இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?!..

Published on: November 15, 2022
udhay
---Advertisement---

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. அதேபோல், இந்த முறை விஜயுடன் நேருக்கு நேர் மோதி ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அஜித் இருக்கிறார். எனவே, அவர் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கலுக்கு வந்தே ஆக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

விஜய்
விஜய்

இங்குதான் பிரச்சனை துவங்கியுள்ளது. பொதுவாக ஒரு பெரிய நடிகர் படம் வெளியாகும்போது அதிக திரையரங்குகள் அவரின் படத்துக்கே ஒதுக்கப்படும். எனவே, மற்றொரு பெரிய நடிகரின் ரிலீஸ் தள்ளி போய்விடும். அப்படி சேர்ந்து வெளியானால் இருக்கும் திரையரங்குள் இருவரின் படங்களுக்கும் பிரிக்கப்படும். ஒரு நடிகரின் படம் சரியில்லை எனில் மற்ற நடிகரின் திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும். இது அந்த நடிகருக்கு இமேஜ் பிரச்சனையாக மாறும்.

Thunivu
Thunivu

இப்படித்தான் ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் என இரண்டு படங்களும் ஒன்றாக வெளியான போது விஸ்வாசம் திரைப்படம் அதிக வசூலை பெற்றது. தற்போது அதேபோன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதில் என்ன பிரச்சனை எனில், துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. எனவே, ஏற்கனவே அதிக திரையரங்குகளை அந்நிறுவனம் கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

vijay
vijay

இதனால், விஜயின் வாரிசு படத்துக்கு குறைந்த திரையரங்குகளே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், துணிவு படத்தை விட வாரிசு படம் குறைந்த வசூலையே பெறும். இது விஜயை அப்செட் ஆக்கியுள்ளது. இதை கையில் எடுத்த அஜித் ரசிகர்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் விஜயை கிண்டலடிக்க துவங்கிவிட்டனர்.

எனவே, வாரிசு திரைப்படத்தின் ரிலீஸை ஜனவரி 26ம் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.