Connect with us
vijayakanth

Cinema History

ஐயாயிரம் அட்வான்ஸ்…திருப்பிக்கொடுத்ததோ ஐம்பதாயிரம்… தயாரிப்பாளரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய கேப்டன்…

விஜயகாந்தின் பெருந்தன்மை குறித்தும், உதவும் மனப்பான்மை குறித்தும் நாம் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு அவரை குறித்த நெகிழ்ச்சி சம்பவங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சக நடிகர்களை மதிப்பதும், பசி என்று வருபவர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டு அனுப்புவதும், உதவி என்று வருபவர்களுக்கு அள்ளிக்கொடுப்பதும் விஜயகாந்த்தின் சிறந்த பண்புகள். இந்த பண்புகளை வைத்து அவர் சம்பாதித்த நபர்கள் பலர் உண்டு.

Vijayakanth

Vijayakanth

இந்த நிலையில் விஜயகாந்த் தனது பெருந்தன்மை நிறைந்த குணத்தால் ஒரு தயாரிப்பாளரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.

1985 ஆம் ஆண்டு விஜயகாந்த், அம்பிகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “புதிய தீர்ப்பு”. இத்திரைப்படத்தை சி.வி.ராஜேந்திரன் இயக்கியிருந்தார். சித்ரா லட்சுமணன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

அக்காலகட்டத்தில் விஜயகாந்த் இரண்டரை லட்ச ரூபாய் சம்பளமாக வாங்கி வந்தாராம். ஆனால் “புதிய தீர்ப்பு” திரைப்படத்திற்காக சித்ரா லட்சுமணன், விஜயகாந்த்திற்கு ரூ. 5000 அட்வான்ஸ் கொடுத்தாராம்.

Chitra Lakshmanan

Chitra Lakshmanan

அதாவது இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகருக்கு ஒன்னரை லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் வெறும் ரூ.5000 மட்டுமே கொடுத்திருக்கிறார். ஆனாலும் விஜயகாந்த் அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

“புதிய தீர்ப்பு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது விஜயகாந்துக்கு 95,000 ரூபாய் கொடுத்தாராம். படம் முடிந்து வெளிவந்துவிட்டது. ஆனால் படம் பொருளாதார ரீதியாக தோல்வியை தழுவியது. இப்போது அந்த இரண்டரை லட்சத்தில் ஏற்கனவே ஒரு லட்ச ரூபாய் விஜயகாந்த்திற்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஒன்னரை லட்ச ரூபாய் பாக்கி இருந்தது.

இதையும் படிங்க: சிவாஜியிடமே “ஒன்ஸ் மோர்” கேட்ட வெளிமாநில இயக்குனர்… அரண்டுபோய் நின்ற கமல்ஹாசன்… அடப்பாவமே!!

Vijayakanth

Vijayakanth

விஜயகாந்த்திற்கு கொடுக்க வேண்டிய ஒன்னரை லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு சித்ரா லட்சுமணன் விஜயகாந்தின் வீட்டிற்குச் சென்றாராம். அப்போது விஜயகாந்திடம் “படம் எங்களுக்கு லாபத்தை கொடுக்கவில்லை. உங்களால் கொஞ்சம் சம்பளத்தை குறைத்துக்கொள்ள முடியுமா? இது எனது வற்புறுத்தல் அல்ல. உங்களுக்கு கொடுக்க வேண்டிய ஒன்னரை லட்ச ரூபாயை நான் கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்கு ஒன்னரை லட்சம்தான் வேண்டும் என்றாலும் தாராளமாக நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என வேண்டுகோள் விடுத்தாராம்.

அதனை கேட்ட விஜயகாந்த் ஒரு லட்ச ரூபாய் மட்டும் வாங்கிவிட்டு மீது 50,000 ரூபாயை சித்ரா லட்சுமணனுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டாராம். விஜயகாந்த்தின் இந்த பெருந்தன்மையை குறித்து தனது வீடியோ ஒன்றில் சிலாகித்து கூறியிருந்தார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

google news
Continue Reading

More in Cinema History

To Top