ரஜினிகாந்த் கோடி ரூபாய் வாங்கிய முதல் படம்… அதுவும் யார் எடுத்த படம் தெரியுமா??

Published on: November 23, 2022
Rajinikanth
---Advertisement---

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த், தொடக்கத்தில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தார். குறிப்பாக கமல்ஹாசனுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு நாள் கமல்ஹாசனும் ரஜினிகாந்த்தும் இனி வரும் திரைப்படங்களில் தனி தனியே நடிப்பதாக முடிவு செய்தனர். அதன் படி இருவரும் தங்களது தனித்துவத்தால் தற்போது தமிழின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர்.

Rajinikanth
Rajinikanth

சூப்பர் ஸ்டார்

தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்த ரஜினிகாந்த், தமிழ் ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். ரசிகர்கள் அவரை “தலைவா” என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.

அரசியல் பிரவேசம்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “பாட்ஷா” திரைப்படம் ரஜினிகாந்த்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது. குறிப்பாக ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்கள் இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் தீயாக உலாவத் தொடங்கியது.

Baassha
Baassha

ஆன்மீக அரசியல்

இதனை தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு தான் அரசியலில் ஈடுபடப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். ஆனால் கட்சியின் பெயர் குறித்தோ, தேதி குறித்தோ பின்னாளில் அறிவிக்கப்படும் என கூறினார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என அறிவித்தார். ஆதலால் இவரது ரசிகர்கள் சோகத்தில் முழ்கினர்.

இதையும் படிங்க: “முதல்வர் இதை செய்ய மறுத்துவிட்டார்”… குறை சொன்ன பிரபல இயக்குனர்… மேடையிலேயே பல்பு கொடுத்த கலைஞர்…

Rajinikanth
Rajinikanth

ஜெயிலர்

ரஜினிகாந்த் தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இதில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கோடி ரூபாய் சம்பளம்

ரஜினிகாந்த் சமீப காலமாக ரூ.125 கோடி சம்பளம் வாங்குவதாக ஒரு தகவல் வெளிவருகிறது. இந்த நிலையில் அவர் முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

தளபதி

Rajinikanth
Rajinikanth

1991 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மம்மூட்டி, ஷோபனா, அரவிந்த் சுவாமி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “தளபதி”. இத்திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் ரஜினிகாந்த் முதன்முதலாக “தளபதி” திரைப்படத்திற்காகத்தான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.