Connect with us

Cinema News

புலி படத்தில் நடிக்க விஜய் மறுத்தாரா? கசிந்த முக்கிய காரணம்… வேண்டாமுனே விட்ருக்கலாம்!

விஜய் நடிப்பில் வெளியான புலி படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் எப்போதுமே அலட்டிக் கொள்ளாமல் ரிஸ்க் எடுக்காமல் நடிப்பவர். அவருக்கு அடுத்து அந்த இடம் விஜயிற்கு தான். வித்தியாசமான கெட்டப் எல்லாம் வேண்டாம். நடிப்பிலேயே ரசிகர்களிடம் அதிக லவ்வை வாங்கி கொள்வதில் கில்லாடி.

புலி

புலி

விஜய் படத்தில் வித்தியாசமான கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாராம். தன் கேரக்டரில் வித்தியாசம் காட்டுவதை பெரிதாக விரும்ப மாட்டாராம். அதற்கு இதுவரை தேவை இருந்தது இல்லை என்பதாக கூட இருக்கலாம்.

அதைபோல ராஜா காலத்து கதைகளில் நடிப்பதையும் விஜய் விரும்ப மாட்டாராம். அதற்கு காரணம் அவரின் உடல்வாகு ராஜா உடைகளுக்கு பொருத்தமாக இருக்குமா என சந்தேகம் தான் என்கிறார்கள் அவரின் நெருங்கிய வட்டாரத்தினை சேர்ந்தவர்கள்.

இதையும் படிங்க: புலி படத்தை பின்பற்றி வரும் பீஸ்ட்.! ஆபத்தை கவனிக்காத தளபதி விஜய்.!?

புலி 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இப்படத்தினை சிம்பு தேவன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் விஜய் அரக்கன் இளவரசனாகவும், அவரது மகன் என இரு வேடங்களில் நடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, சுதீப், ஸ்ரீதேவி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

புலி

Chimbu devan

இப்படத்தில் தான் விஜய் அரசகுமாரனாக நடித்திருப்பார். ஆனாலும் அவருக்கு இந்த கதை சொன்ன போதே எனக்கு இந்த கதாபாத்திரம் சரியா வருமா என தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தாராம். சிம்பு தேவன் கண்டிப்பாக இந்த படத்தில் நீங்க தான் நடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாராம். விஜயிற்காக காஸ்ட்யூம்களில் அதிக கவனம் செலுத்தி அதை வடிவமைத்ததாக கூறப்படுகிறது.

Continue Reading

More in Cinema News

To Top