அடேய்களா! இதுவும் காப்பி தானா.. தீ தளபதி பாடலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்.. எந்த பாட்டோட காப்பி தெரியுமா?

Published on: December 5, 2022
---Advertisement---

விஜயிற்காக சிம்பு குரலில் வெளியாகி இருக்கு தீ தளபதி பாடலும் காப்பி தான் என்ற ஒரு தகவல் இணையத்தினை வட்டமடித்து வருகிறது.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கி வரும் படம் வாரிசு. ராஷ்மிகா, குஷ்பூ, சஞ்சய் தத், பிருத்விராஜ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தை பொங்கலுக்கு இந்த படத்தினை ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

varisu

இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருக்கிறார். முதல் பாடலாக ரஞ்சிதமே வெளியானது. மானசாவுடன் விஜய் இணைந்து பாடி இருந்தார். அவரது குரலுக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த பாட்டிற்கு லைக் தட்டினர். தொடர்ந்து இரண்டாவது சிங்கிளை சிம்பு பாட இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

இதையும் படிங்க: மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளும் ‘தீ.. தளபதி’ பாடல்!.. அந்த பாடலுக்கு சிம்புவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?..

சிம்புவின் பாடலுக்கு ரசிகர்கள் ஏராளம். அதிலும் தளபதிக்காக அவர் பாடும் பாடல் என எதிர்பார்ப்பு எகிறியது. இந்த நிலையில் படக்குழு ப்ரோமே இல்லாமல் பாடலை நேரடியாக ரிலீஸ் செய்தது. முழு பாடலிலும் சிம்பு நடித்திருந்தார். இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மில்லியன் வியூஸை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. நல்லாவா போகுது இந்தோ வரேன் ரேஞ்சில் சிலர் களமிறங்கி இருக்கிறார்கள்.

simbu

இந்த பாடல் நானும் ரவுடி தான் படத்திற்காக அனிருத் இசையமைத்த வரவா வரவா பாடலை போன்றே இருக்கே என ட்வீட்டினர். உடனே செய்தி தீயாக பற்றிக்கொண்டது. மேலும், சிலர் நான் ஈ படத்தில் ஈ டா பாடலை போலவே இருக்கே என மாறி மாறி ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.