Cinema History
எம்ஜிஆர் கொடுத்த அன்பளிப்பை தொலைத்துவிட்டு அல்லோல் பட்ட நடிகை!.. திரும்பி கிடைத்த சுவாரஸ்யமான கதை!…
தமிழ் சினிமாவில் எதார்த்தமான நடிகையாக ஒரு தைரியமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌகார் ஜானகி. நடிக்கும் வரும்போதே இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தனர். வீட்டு சூழ்நிலைக்காக நடிக்க வந்தவர் தன் அற்புதமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வென்றிருக்கும் சௌகார் ஜானகி சிவாஜியுடன் தான் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். எம்ஜிஆருடன் ஒளிவிளக்கு, பணம் படைத்தவன், பெற்றதால் தான் பிள்ளையா, தாய்க்கு தலைமகன் போன்ற நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக எம்ஜிஆரின் கெரியரில் மிக முக்கியமான படமாக ஒளிவிளக்கு படம் விளங்கியது. ஏனெனில் எம்ஜிஆரின் முதல் படமான சதிலீலாவதி படத்தை தயாரித்த ஜெமினி ஸ்டூடியோஸ் தான் இந்த படத்தையும் தயாரித்தது. ஒளிவிளக்கு எம்ஜிஆருக்கு 100 வது படமும் கூட. மேலும் ஜெமினி ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கும் முதல் கலர் படமாக ஒளிவிளக்கு படம் அமைந்தது.
இதையும் படிங்க : அளவில்லாமல் போன ரசிகர்களின் குடைச்சல்!.. காண்டாகி அஜித் செய்த காரியம்.. வாயடைத்து நின்ற ஒட்டுமொத்த யுனிட்!..
இந்த படத்தில் லீடு ரோலில் எம்ஜிஆரும் அவருக்கு ஜோடியாக ஜெயலலிதாவும் நடித்திருப்பார். சௌகார் ஜானகி எம்ஜிஆருக்கு தங்கை போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் கதைப்படி எம்ஜிஆர் தீக்காயம் பட்டு படுத்திருக்கும் சமயத்தில் சௌகார் ஜானகியால் பாடப்படும் ‘ஆண்டவனோ உன் பாதங்களை கண்ணீரால் நீராட்டினேன்’எனும் பிரார்த்தனை பாடல் நல்ல ஹிட் பாடலாக அமைந்தது.
இந்த பாடலே வருங்காலத்தில் எம்ஜிஆர் உடல் நிலை சரியில்லாத சமயத்தில் அமெரிக்காவில் சிகிச்சை எடுக்கும் சமயத்தில் ஒட்டுமொத்த தாய்மார்களின் பாடலாகவும் இந்த பாடல் அமைந்தது. படப்பிடிப்பு முடிந்து படத்தின் முதல் காப்பியை பார்ப்பதற்கு ஜெமினி ஸ்டூடியோவில் ஷோ அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க : நயன்தாரா உதவி இயக்குனராக பணியாற்றிய படம் எதுனு தெரியுமா?.. நம்ம தல படம் தான்!..
அந்த ஷோவை பார்ப்பதற்கு எம்ஜிஆரும் சௌகாரும் மற்ற நடிகர்களும் வந்திருந்தனர். அப்போது எம்ஜிஆர் சௌகாரின் நடிப்பை பார்த்துவிட்டு மிரண்டு போய்விட்டாராம். உடனே அவருக்கு அன்பளிப்பாக ஒளிவிளக்கு படத்தின் நியாபகமாக ஒரு ஒளிவிளக்கை கொடுத்திருக்கிறார். அந்த லேம்பை இன்று வரை வைத்திருந்த சௌகார் இடையில் பழுது பார்ப்பதற்காக ஒரு மெக்கானிக்கிடம் கொடுத்திருக்கிறார்.
கொடுக்கும் போதே இது எம்ஜிஆர் எனக்காக கொடுத்தது என்று சொல்லி திரும்பி பத்திரமாக கொடுத்து விடு என்று கொடுத்திருக்கிறார். வாங்கிக் கொண்டு போன அந்த மெக்கானிக் கிட்டத்தட்ட 7வருடங்களை கடந்த நிலையிலும் திரும்ப வரவில்லை. ஒரு நேரத்தில் கவலையில் திகைத்தாராம் சௌகார்.
எழு வருடங்கள் கழித்து அந்த மெக்கானிக்கை பாரிஸ் மார்க்கெட்டில் பார்த்திருக்கிறார் சௌகார். அவரிடம் கேட்க அந்த மெக்கானிக்கோ என்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக விற்று விட்டேன் என்று சொல்லியிருக்கிறார். உடனே போலீஸிடம் புகார் செய்து யாரிடம் விற்றாரோ அவரின் விலாசத்தை அறிந்து கொண்டு அவரை வரவழைத்து அந்த ஒளிவிளக்கை பெற்றிருக்கிறார் சௌகார் ஜானகி. இன்னமும் அந்த ஒளிவிளக்கு அவரின் வீட்டை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது என்பது சொல்லப்படுகிறது.