
Cinema News
நயன்தாரா உதவி இயக்குனராக பணியாற்றிய படம் எதுனு தெரியுமா?.. நம்ம தல படம் தான்!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன் தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நயன் பல கிசுகிசுக்களில் சிக்கி சிறிது காலம் கஷ்டத்தில் இருந்தார். அதன் பின் எல்லா தடைகளையும் தாண்டி விஸ்வரூபம் எடுத்தார் நயன் தாரா. தனது செகண்ட் இன்னிங்கிஸில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

nayanthara
அதன் மூலம் பல படங்கள் வெற்றி நடை போட்டு லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்தார். அதன் பின் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். அந்த வகையில் நெற்றிக்கண், அறம், போன்ற வரிசையாக பல படங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது.
இதையும் படிங்க : உலகம் இருக்கும் வரை நடிப்பின் எவரெஸ்ட் புகழ் நிலைத்து இருக்கும்…! மிருதங்க வித்வான் புகழாரம்!..
பெண்களை மையப்படுத்தி அமையும் கதைகளில் அதிகம் நடித்த நடிகையாக நயன் விளங்கினார். இந்த நிலையில் அஜித் நடித்த ஒரு படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார் என்று அந்த படத்தில் ஸ்கிரீன் பிளே செய்த சுபா சகோதரர்கள் தெரிவித்தனர்.

nayan ajith
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ‘ஆரம்பம்’ .இந்த படத்தில் அஜித், நயன்தாரா. ஆர்யா போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஒரு காட்சிக்கு புல்லட் புரூஃப் ஜாக்கெட் தேவைப்பட்டதாம். சரியான நேரத்தில் அந்த ஜாக்கெட் கிடைக்காததால் விஷ்ணு வர்தன் கோபத்தில் இருந்த அத்தனை உதவி இயக்குனர்களிடம் கோபத்தை காட்டியிருக்கிறார்.
அதே நேரம் யாரும் வேலை பார்க்க வேண்டாம், நானே பார்த்துக் கொள்கிறேன் என்று யாரையும் வேலை செய்ய விடவில்லையாம். சூட்டிங் ஆரம்பித்திருக்கிறது. அப்போது நயன்தாரா தான் க்ளாப் அடித்து ஆரம்பித்திருக்கிறார். இதை பார்த்த மற்ற அனைவரும் ஐய்யோ நயன் மேடம் இத செய்கிறார்கள் என்று சலசலப்பில் பேசிக் கொண்டிருந்தார்களாம்.

nayan ajith
உடனே நயன் உரத்த குரலில் ‘சைலன்ஸ்’ என்று சொல்லிவிட்டு சூட்டிங் நடக்கிறப்போ தயவு செய்து சத்தம் போடதீர்கள் என்று சொன்னாராம். ஒரு உதவி இயக்குனர் செய்ய வேண்டியதை விஷ்ணுவர்த்தனுக்காக நயன் ஆரம்பம் படத்தில் செய்தார் என்று அந்த படத்திற்கு டையலாக் எழுதிய சுபா தெரிவித்தார்.