Connect with us

Cinema History

உலகம் இருக்கும் வரை நடிப்பின் எவரெஸ்ட் புகழ் நிலைத்து இருக்கும்…! மிருதங்க வித்வான் புகழாரம்!..

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகத்தான நடிப்பில் வெளியான படம் மிருதங்க சக்கரவர்த்தி. இந்தப்படத்தில் அவர் மிருதங்க வித்வானாக நடித்து இருந்தார். படத்தைப் பார்க்கும் போது நமக்கு உண்மையிலேயே சிவாஜி மிருதங்க வித்வானாகத் தான் தெரியும்.

அந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்து அசத்தியிருந்தார். இதற்குக் காரணம் யார் என்றால் உமையாள்புரம் சிவராமன். இவர் தான் இந்தப் படத்தில் சிவாஜிக்கு மிருதங்கம் வாசிப்பது எப்படி என்று பயிற்சி கொடுத்தவர். இவர் சிவாஜி உடனான அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

Miruthanga Chakaravarthi poster

திரையுலகில் யாரும் காணாத ஒரு சகாப்தத்தைத் துவக்கியது நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை அவர் கனகச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்வார்.

நடிப்பு முறையிலும் சரி, வசன உச்சரிப்பிலும் சரி, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் சரி. நூற்றுக்கு நூறு உண்மையாகவும், திறம்படவும் புதிய நூதனமான உத்திகளிலும் அவர் வெளிப்படுத்தினார். சினிமாவுக்கு மாபெரும் வழிகாட்டி அவர்.

என்னுடைய சொந்த கணிப்பில் நான் அவரை நடிப்புச் சக்கரவர்த்தி என்றோ அல்லது நடிப்பின் எவரெஸ்ட் என்றோ கூறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

மிருதங்க சக்கரவர்த்தி படத்தின் மூலம் அவரது நட்பு எனக்குக் கிடைத்தது. இந்தப் படத்தைத் துவக்கும் முன் அவருக்குப் பின்னணியாக கர்நாடக இசை உலகில் முன்னணியாக இருக்கக்கூடிய நான் தான் மிருதங்கம் வாசிக்க வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பி அதன்படி நான் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

Umaiyalpuram Sivaraman

இந்தப்படத்தில் அவருடைய மகன் பிரபுவுக்காகவும் ஒரு காட்சிக்காக வாசித்துள்ளேன். ஆனால் எனது முழுமையான மிருதங்க வாசிப்புகள் அனைத்தும் நடிகர் திலகத்தின் முழுப்பங்கிற்குத் தான். இந்தப் படத்திற்கு உண்டான ரெக்கார்டிங்குகள் அனைத்தும் 3 நாள்களில் முடிந்துவிட்டன.

இதன் பின்னர் நடிகர் திலகம் மிருதங்கம் வாசித்த காட்சி சூட்டிங் எல்லாவற்றிற்கும் நான் அவருடனேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் என்னை அன்பாக வாத்தியார் சார் என்று தான் அழைப்பார்.

இந்தப்படத்திற்காக அவருடன் பழகியதில் அவரது உயர்ந்த குணத்தை அறிந்து கொண்டேன். நடிகர் திலகம் எனக்குத் தோன்றிய வகையில் இதை அவரே செய்திருக்கலாம்.

ஏன் என்றால் அவர் ஒரு பிறவி மேதை. ஆனால் மிருதங்க உலகில் முன்னணி நிலையில் இருந்த என்னிடம் மிருதங்கம் சம்பந்தப்பட்ட இந்தப் படத்திற்காக பல்வேறு விபரங்களையும் நுணுக்கங்களையும் கேட்டு அறிந்து கொண்டார்.

Sivaji

அவருடைய பெருந்தன்மையும், புத்திக்கூர்மையும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு பெர்பெக்ஷனாக இருக்க வேண்டும் என்ற தொழில் பக்தியையேக் காட்டுகிறது. இவை எல்லாமே அவருக்குக் கைவந்த கலை. அதனால் தான் அவர் நடிகர் திலகமானார்.

இந்தப்படம் முடிந்ததும் என்னை அவரது இல்லத்திற்கு வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார். அவரது அழைப்பை ஏற்று அவரது இல்லத்திற்குச் சென்று அரை மணி நேரம் பேசினேன். மறக்கமுடியாத வகையில் பசுமையாக இருந்தது. இந் த உலகம் இருக்கும் வகையில் நடிகர் திலகத்தின் புகழ் நிலையாக இருக்கும்.

google news
Continue Reading

More in Cinema History

To Top