உலக நாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசனின் புகழையும் பெருமையையும் குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். எனினும் கமல்ஹாசனிடம் இருந்த பெருந்தன்மையான குணத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை குறித்து நடிகர் ராஜேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

ஒரு முறை பெருளாதார சிக்கலில் இருந்த ராஜேஷ், தனது வீட்டை விற்றுவிட்டாராம். இதனை கேள்விப்பட்ட கமல்ஹாசன் பதறிப்போய் “வீட்டை வித்துட்டீங்களா? அந்த காசை நான் கொடுத்திடுறேன். வீட்டை திருப்பிடுங்க” என கூறினாராம். இது குறித்து பேசிய ராஜேஷ் “நான் வீட்டை விற்றுவிட்டேன் என்று கேள்விப்பட்டவுடன் கமல்ஹாசன் பதறிப்போய்விட்டார். உட்கார்ந்திருந்தவர் பதற்றத்தில் எழுந்துவிட்டு ‘வீட்டை வித்துட்டீங்களா?’ என கேட்டார். அந்த பதற்றத்தில் தூய்மையான அன்பு தெரிந்தது” என நெகிழ்ச்சியோடு கூறினார்.
இதையும் படிங்க: வணங்கான் படம் டிராப் ஆனது எதுனால தெரியுமா?? சீக்ரெட்டை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்..

மேலும் பேசிய அவர் “ராஜக்கண்ணு என்ற தயாரிப்பாளர் மிகப்பெரிய கடன் சுமையில் இருந்தார். அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்தது. ஒரு நாள் நான் கமலிடம் ‘ராஜகண்ணுவுக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறது. அவர் கடன் சுமையால் அவதிப்படுகிறார். அவருக்கு உதவி செய்தால் கொஞ்சம் கடன் சுமை தீரும்’ என வேண்டுகோள் விடுத்தாராம். அதன்பிறகுதான் ராஜக்கண்ணு தயாரிப்பில் மகாநதி என்ற படத்தை உருவாக்கினார் கமல்ஹாசன். அந்த படத்தின் மூலம் ராஜக்கண்ணு நிறைய கடன்களை அடைத்தார்” என கூறியது குறிப்பிடத்தக்கது.

1994 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியான திரைப்படம் “மகாநதி”. இத்திரைப்படத்தை சந்தானபாரதி இயக்கியிருந்தார். இதில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க சுகன்யா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பூர்ணம் விஸ்வநாதன், ஹனீஃபா, ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். “மகாநதி” திரைப்படம் இப்போதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
