Cinema News
“சமந்தாவின் கடைசி படம் இதுதான்?”… திடீரென எடுத்த முடிவால் ஷாக் ஆன ரசிகர்கள்…
தென்னிந்தியாவின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. தொடக்கத்தில் “மாஸ்கோவின் காவிரி”, “பாணா காத்தாடி”, “விண்ணைத்தாண்டி வருவாயா” போன்ற திரைப்படங்களில் நடித்த சமந்தா, “நான் ஈ”, “நீதானே என் பொன்வசந்தம்” ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வளர்ந்தார்.
அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த சமந்தா, தெலுங்கின் டாப் நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். அதன் பின் ஒரு கட்டத்தில் தென் இந்தியாவின் டாப் நடிகையாக உயர்ந்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
சமந்தா கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்தே உடல்நல கோளாறு காரணமாக நடிப்புக்கு சிறு இடைவேளை விட்டு சிகிச்சை எடுத்து வந்தார். அதன் பின் மீண்டும் சினிமாவில் ஜொலித்த சமந்தா, கடந்த அக்டோபர் மாதம் மையோசிட்டீஸ் என்ற நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து சமந்தா தகுந்த சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: “அரசியலுக்குள் காலடி எடுத்து வைப்பார் பிரேம்ஜி அமரன்!!”… அடேங்கப்பா!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
சமந்தா சமீபத்தில் “யசோதா” என்ற திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து சமந்தா நடித்த “சகுந்தலா” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. மேலும் தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக “குஷி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் “ஆராத்யா” என்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் “குஷி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபிறகு நீண்ட நாள் நடிப்பிற்கு இடைவெளி விடப்போகிறாராம் சமந்தா. இந்த இடைவெளியில் நன்றாக சிகிச்சை எடுத்துக்கொண்டு தனது உடல்நலம் தேறிய பின் மீண்டும் சினிமாவில் நடிப்பதாக முடிவெடுத்துள்ளாராம். இதனால் சமந்தா ஒப்பந்தமான படங்களின் தயாரிப்பாளர்கள் வேறு நடிகைகளை தேர்வு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளார்களாம்.