ஓடி வந்த உதவிய விஜயகாந்த்!.. கேப்டனுக்கு நன்றிக்கடன் பட்ட தனுஷின் குடும்பம்.. மனம் உருகி பேசிய கஸ்தூரி ராஜா..

Published on: December 22, 2022
vijay_main_cine
---Advertisement---

உதவி என்றால் ஒதுங்கி போகும் உலகம் இது. ஆனால் உதவி செய்வதற்கே படைக்கப்பட்ட ஒரு உன்னதமான ஜீவனாக வலம் வந்தவர் தான் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். சினிமாவில் இவரின் பிரவேசம் என்பது பல இன்னல்களை கடந்து அவமானங்களை சகித்துக் கொண்டு வந்த பயணமாக தான் இருந்திருக்கிறது.

viji1_cine
vijayakanth dhanush

அதற்கு முதல் காரணமாக இருந்தது இவரின் மொழியும் உடல் தோற்றமும். ஆரம்பத்தில் உன் தமிழ் சரியில்லை என்று ஒதுக்கியவர்கள் ஏராளம். அதன் பின் நிறத்தை காரணம் காட்டி அவமானப்படுத்தியவர்களும் ஏராளம். அவர்கள் மத்தியில் இன்று ஒரு ஒட்டு மொத்த தமிழகமே கொண்டாடும் கேப்டனாக வலம் வருகிறார் விஜயகாந்த்.

இதையும் படிங்க : விஜய்க்கும் அஜித்திற்கும் இடையே ஏற்படும் கைகலப்பு!.. விஜய் பண்ணிட்டாரு..அஜித் பண்ணாம இருப்பாரா?..

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இவரின் கொடைத்தன்மைக்கும் அளவே இல்லை. இல்லை என்று வந்தவருக்கு அள்ளிக் கொடுத்தவர் நம் விஜயகாந்த். எம்ஜிஆருக்கு அடுத்தப்படியாக நம் வீட்டு சொந்தக்காரர் என்ற எண்ணத்தில் அள்ளி கொஞ்சும் நபர் யார் என்றால் விஜயகாந்த் தான். இது பொதுமக்களில் இருந்து பிரபலங்கள் வரை அனைவருக்கும் உதவிகளை செய்து கொண்டு வந்திருக்கிறார்.

viji2_cine
vijayakanth

அந்த வகையில் ஒரு சம்பவம் நடிகர் தனுஷ் வீட்டிலும் நடந்திருக்கிறது. ஒரு மேடையில் பேசிய தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா விஜயகாந்த் செய்த உதவியை கூறி அவருக்கு கைகூப்பி மரியாதையையும் செலுத்தினார். கஸ்தூரி ராஜாவுக்கு இரண்டும் மகன்கள், இரண்டு மகள்கள்.

இதையும் படிங்க : பட விழாவில் கலந்து கொள்ளாததற்கு காரணமே இது தான்!.. வாய் திறந்த நயன்தாரா…

அதில் ஒரு மகள் தற்போது அப்போல்லோ மருத்துவமனையில் பிரபல மருத்துவராக பணிபுரிகிறார். அவர் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் கட் அவுட் மார்க் 1 மதிப்பெண்ணில் வாய்ப்பு போய்விட்டதாம். அதை நினைத்து அந்த நேரத்தில் அழுது கொண்டிருந்தாராம். திடீரென கஸ்தூரி ராஜா வீட்டிற்கு சென்ற விஜயகாந்த் தனுஷின் சகோதரி அழுததை பார்த்து விபரத்தை அறிந்திருக்கிறார்.

viji3_cine
kasthuri raja

உடனே கஸ்தூரி ராஜா வீட்டில் இருந்தே ராமச்சந்திரா மருத்துவமனை தலைமை உடையாருக்கு போன் செய்து செய்தியை கூறியிருக்கிறார் விஜயகாந்த். உடையார் இவர்களை நேரில் வரச் சொல்ல உடவே ஷீட் கொடுத்து இன்று ஒரு பெரிய மருத்துவராக என் மகள் இருக்கிறார் என்றால் அது விஜயகாந்தால் மட்டுமே என்று கஸ்தூரி ராஜா கூறினார். மேலும் விஜயகாந்த் இல்லையென்றால் என் மகள் மருத்துவராக இல்லை என்றும் தெரிவித்தார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.