இந்த படத்துக்காக கமல் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?? உலக நாயகனின் மெய் சிலிர்க்கவைக்கும் டெடிகேஷன்…

Published on: December 24, 2022
Kamal Haasan
---Advertisement---

உலக நாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசனின், நடிப்பை குறித்து நாம் தனியாக கூறவேண்டிய அவசியம் இல்லை. சினிமாவுக்காகவே வாழ்கிற கலைஞனாகத்தான் நாம் கமல்ஹாசனை பார்க்கமுடியும். ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் உயிர் கொடுக்க அவர் மெனக்கெடுவது பலரையும் வியப்பில் ஆழ்த்துபவை. சினிமாவில் உயிரையே பணயம் வைத்து ரிஸ்க் எடுப்பவர்களில் முன்னால் நிற்பவர் கமல்ஹாசனே.

Kamal Haasan
Kamal Haasan

இந்த நிலையில் “அன்பே சிவம்” திரைப்படத்தில் நல்லசிவம் என்ற கதாப்பாத்திரத்திற்காக கமல்ஹாசன் செய்த மெனக்கெடல்கள் குறித்து அத்திரைப்படத்தின் இயக்குனர் சுந்தர்.சி, ஒரு பொது மேடையில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு கமல்ஹாசன், மாதவன், கிரண் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அன்பே சிவம்”. இப்போதும் சினிமா ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுகிற திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இதில் இடம்பெற்ற வசனங்கள் காலத்துக்கும் நிற்கக்கூடிய வசங்களாக ரசிகர்களை ஈர்த்துள்ளது. கமல்ஹாசன் கேரியரிலேயே மிக முக்கியமான திரைப்படம் “அன்பே சிவம்”.

Anbe Sivam
Anbe Sivam

இதில் நல்லசிவம் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். முகத்தில் தழும்பு, ஓரு பெரிய மூக்கு கண்ணாடி ஆகியவற்றுடன் அடிப்பட்ட கால்களால் நொண்டி நொண்டி நடக்கும் நல்லசிவத்தை நாம் அவ்வளவு எளிதில் மறந்திடமுடியாது.

“கமல்ஹாசன் அதில் அணிந்திருக்கும் கண்ணாடியை நாம் அணிந்தால் நமக்கு தலை சுற்றும். ஆதலால் அந்த கண்ணாடியோடு மேட்ச் செய்வதற்கு கண்களில் லென்ஸ் போட்டுக்கொண்டார். இதில் இன்னொரு கஷ்டம் என்னவென்றால் அந்த லென்ஸை போட்டுக்கொண்டு தலையை குனிந்து கீழே பார்த்தால் தலை சுற்ற ஆரம்பித்துவிடும்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த்துடன் இணையும் Come Back இசையமைப்பாளர்… டிவிஸ்டுக்கு மேல டிவிஸ்ட் வைக்குறாங்களே!!

Anbe Sivam
Anbe Sivam

அவர் அந்த கதாப்பாத்திரத்தில் நொண்டி நடக்கவேண்டும் என்பதற்காக ஒரு காலில் உயரம் அதிகமான ஷூவையும் இன்னொரு காலில் உயரம் கம்மியான ஷூவையும் போட்டுக்கொண்டார்” என்று சுந்தர்.சி கமல் செய்த மெனக்கெடல்கள் குறித்து கூறியிருந்தார். ஒரு திரைப்படத்திற்காக இந்த அளவு மெனக்கெடுவதால்தான் இன்றும் உலகநாயகனாக திகழ்கிறார் கமல்ஹாசன்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.